தீமைகள் பல தரும் Food Preservatives and additives
தீமைகள் பல தரும் Food Preservatives and additives
நம் உணவில் கலந்து வரும் பாதுகாப்பு ரசாயனங்கள்
(preservatives) மற்றும் சேர்க்கைகள் (additives) பற்றி அவசியம் தெரிந்துக்
கொள்ளுங்கள். ஏனெனில் உணவு என்பது வெறும் வயிறை நிரப்புதல் அல்ல. அது நம் உடலை
பேணும் ஒரு முக்கிய அம்சம்.
பொதுவாக நாம் சமைத்த உணவுகளை ஒரு நாளைக்கு மேல் வெளியில்
வைத்து பாதுகாக்க முடியாது. ஏன் குளிர்சாதன பெட்டியில் கூட வைத்து பாதுகாக்க
முடியாது? ஏனெனில் நம்மை போல் மற்ற நுண்ணிய உயிரிகளும் நம் உணவை உண்டு வாழ
முற்படும் பொழுது தான் உணவுகள் பழுதாகி போகின்றன. இது இயற்கையின் நியதி.
ஆனால் பிஸ்கட், சாக்லேட், ஓட்ஸ், கார்ன் பிளாக்ஸ், பால்மாவு,
ஜாம், தக்காளி சாஸ், டின் மீன்கள், டின் இறைச்சிகள், ஐஸ் கிரீம் போன்ற அனைத்தும்
ஓராண்டுகளுக்கு வைத்து பாதுகாக்க முடிகிறது. பிரட், யோகர்ட், பால், வெண்ணெய்,
பழச்சாறுகள், இறைச்சிகள் போன்றவை கூட ஒரு கிழமைக்கு வைத்து உண்ணும் அளவில் உள்ளன.
அது எப்படி சாத்தியம்?
ஏனெனில் மற்ற நுண்ணுயிர்கள் இவ்வுணவுகளை நெருங்காத வண்ணம்
அவற்றில் Benzoic acid, Pottasium Sorbate போன்ற பாதுகாப்பு ரசாயனங்கள் மற்றும்
உணவின் சுவை மற்றும் தரம் பேணப்பட Monosodium Glutamate, Sodium Nitrite போன்ற பல
ரசாயன சேர்க்கைகள் கலக்கப்பட்டே பாக்கெட் செய்யப்படுகின்றன.
பாதுகாப்பு ரசாயனங்கள் (Preservatives) என்பது உணவுகளை நோக்கி
வரும் நுண்ணிய உயிர்களை அழிப்பதற்கு சேர்க்கப்படும் கிருமி கொல்லிகள். அதே போல்
உணவின் சுவை, மற்றும் தரம் மக்களை கவரும் வண்ணம் உபயோகிக்கப்படும் ரசாயன
சேர்க்கைகள் தான் food additives ஆகும்.
பொதுவாக பயிர்களுக்கு உபயோகிக்கப்படும் பூச்சிகொல்லிகளை பற்றி
கவலை படும் நாம், உணவுகளுக்குள் கலந்துள்ள கிருமி கொல்லிகளை பற்றி அலட்டிக்
கொள்வதில்லை. அதனை யாரும் வெளிப்படையாக பேசுவதுமில்லை.
ஆனால் இந்த பாதுகாப்பு ரசாயனங்கள் மற்றும் ரசாயன சேர்க்கைகள்
கலந்த உணவுகளை நாம் உண்ணும் பொழுது அதில் உள்ள அந்த பாதுகாப்பு ரசாயனங்கள் நம்
சமிபாட்டு தொகுதியில் இருக்கும் நல்ல நுண்ணியிரிகளையும் சேர்த்தே அழிப்பதோடு நம்
உடலையும் சிறுக சிறுக அழிக்க தொடங்கும்.
இவற்றினால் வரும் கேடுகளை கவனியுங்கள்.
இவற்றினால் வாய்ப்புண், உணவு எதுக்களித்தல், குடற்புண்கள்,
மலசிக்கல், தோல் அழற்சி போன்ற குறுகிய கால கேடுகள் வரும். இதுவே நாளடைவில்
நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய்கள், முடி கொட்டுதல், முடி நரைத்தல், தோல் பிரச்சினைகள்,
எலும்பு பலவீனமடைதல், இளமையிலேயே வயது முதிர்தல் போன்ற தீராத பிரச்சினைகளை கொண்டு
வந்து சேர்த்து விடும்.
ஆகவே சிரமத்தை உணவில் காட்டாது அன்றன்று சமைத்து உண்ணுதல் தான்
இதற்கு நிரந்தர தீர்வு. அதே போல் சமையல் செய்ய அனைவரும் உதவி செய்தால் சமையல் சிரமமான
ஒன்றாக மாறாது. உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.