மதுப் பழக்கத்தினால் உண்டான விக்கலை நிறுத்த அற்புதமான வழி...
மதுப் பழக்கத்தினால் உண்டான விக்கலை நிறுத்த அற்புதமான வழி...
மதுப் பழக்கத்தினால் கல்லீரலைக் கெடுத்துக் கொண்ட அன்பர்களுக்கு, அவர்களையும் வாழ்விக்கும் பொருட்டு அரிய மருந்தொன்று உண்டு. தீவிர மதுப்பழக்கம் உடையோருக்கு, கல்லீரல் கெட்டு இரத்த மாறுபாடுகள் உண்டாகி விக்கல் நோய் உண்டாகும். விக்கல் நோயை முற்றாகக் குணப்படுத்தும் வல்லமை மாதுளைக்கு உண்டு.
தேவையான பொருட்கள்:
மாதுளம் பிஞ்சு,
மாதுளம்பூ,
வறுத்த சீரகம்,
கீழாநெல்லி,
கரிசலாங்கண்ணி,
மஞ்சள்
ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை விக்கல் கண்டபோது தேனில் 5gm குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். மேலும் அடிக்கடி விக்கல் நோயால் அவதிப்படுபவர்களும், குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்களும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, பித்தப்பையில் உண்டாகும் புண், கட்டி, கற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப்படுத்தும். இம்மருந்தினை சாப்பிட சகல ஆரோக்கியமும் பெறுவீர்கள்.