அகத்தியர் அருளிய சிறுநீரகக் கல் கரைய மருந்து...

 அகத்தியர் அருளிய சிறுநீரகக் கல் கரைய மருந்து...

 

"ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி

லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும்

அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி

இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்".

 

- அகத்தியர் நயன விதி -

ஏலரிசி - 25 கிராம்

தேங்காய்ப்பூ - 25 கிராம்

நெருஞ்சில் வேர் - 25 கிராம்

மாவிலங்கம் வேர் - 25 கிராம்

சிறு பூனைக்காலி வேர் - 25 கிராம் 


இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லிட்டராகக் காய்ச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் போது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம்.

இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.