மலச்சிக்கலுக்கு மருந்தும் விளக்கமும்...

 மலச்சிக்கலுக்கு மருந்தும் விளக்கமும்...

 

   எவரொருவர் நாளொன்றுக்கு இரண்டு வேளை மலம் கழிக்கவில்லையோ அவர்கள் அனைவருமே மலச்சிக்கல் எனும் நோய் உள்ளவர்களே..

 

     நாம் தினம் மூன்று வேளை உணவு அருந்துகின்றோம் இந்த மூன்று வேளை உணவின் கழிவுகளும் அடுத்தநாள் வெளியாவதில்லை காலை மதியம் இந்த இரண்டு வேளை சாப்பிட்ட உணவின் கழிவே அடுத்த நாள் காலை மலமாக வெளியாகிறது

 

    இரவு சாப்பிட்ட உணவின் கழிவு அடுத்த நாள் காலை வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் இருக்கின்றது

 

   அதாவது நாம் உண்ணுகின்ற உணவு மலம் எனும் கழிவாக மாறுவதற்கு பனிரெண்டு மணி நேரம் தேவைப் படுகின்றது 

 

      நாம் இரவு உணவை ஒன்பது மணிக்கு சாப்பிடுகின்றோம் இந்த உணவானது அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கே வெளியாவதற்கு உண்டான கழிவாக மாற்றம் பெறுகின்றது

 

அப்படியிருக்க

  காலையில் மலம் கழிப்பதற்கு முன்பே உணவருந்தக் கூடாது என்ற காரணத்தினால் நாம் அனைவரும் காலை ஆறு மணிக்கே மலத்தை கழித்து விடுகின்றோம் 

   ஆக முந்தைய  நாள் சாப்பிட்ட உணவு அடுத்த நாள் காலை  ஆறு மணிக்கு கழிவாக மாற்றம் பெறாது  என்பதால் இரவு சாப்பிட்ட உணவின் கழிவு உடலிலேயே இருந்து விடுகின்றது

   இருவேளை மலம் கழிப்பவர்களுக்கு  இந்தக் கழிவானது மாலை வேளையில் வெளியேறிவிடும் அப்படியானால் ஒரு வேளை மட்டும் மலம் கழிப்பவர்கள் அனைவருமே மலச்சிக்கல் உள்ளவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை

 

இருவேளை மலம் கழிப்பதற்கு மருந்துகள்

திரிபலா, நிலாவரை சூரணம்

 

தேவையான பொருட்கள்

கடுக்காய் சூரணம் 50 கிராம் நெல்லிக்காய் சூரணம்50 கிராம் 

தான்றிக்காய் சூரணம் 50 கிராம் 

நிலாவரை சூரணம் 150 கிராம்

      அளவுகளின்படி இந்த சூரணங்களைக் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் உணவு சாப்பிட்ட பின்னால்  சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நிவர்த்தியாகும்

 

திரிகடுகு நிலாவரை சூரணம்

தேவையான பொருட்கள்

சுக்கு சூரணம் 50 கிராம் 

மிளகு சூரணம் 50 கிராம் 

திப்பிலி சூரணம் 50 கிராம் 

ஓமம் சூரணம் 50 கிராம் 

நிலாவரை சூரணம் 200 கிராம்

 

     இந்த சூரணங்களை ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு இரவு சாப்பிட்ட பின்னால் சுடுதண்ணீரில்  கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்

 

கடுக்காய் கிராம்பு சூரணம்

தீராத மலச்சிக்கல் உள்ளவர்கள்

கடுக்காய் 50 கிராம் 

கிராம்பு 50 கிராம்

      இந்த இரண்டு பொருட்களையும் சரிசமமாக கலந்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு இரவு சாப்பிட்ட பின்னால் தொடர்ந்து ஒரு மண்டல காலம் சுடுதண்ணீர் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் எனும் நோய் வெகு எளிதாக நீங்கிவிடும்.