குறட்டை விடுவதை நிறுத்த ‘முசுமுசுக்கை

 குறட்டை விடுவதை நிறுத்த ‘முசுமுசுக்கை’-

மூலிகையை இப்படி பயன்படுத்துங்கள்! 

 

முசுமுசுக்கை தூளை, சிறிதளவு நீரில் கலந்து நன்கு காய்ச்சி பருகி வரும் போது, தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் சளி, தும்மல் போன்ற சுவாச பாதிப்புகள் விலகுவதுடன், உடல் சூட்டைத் தணித்து குறட்டை விடுவதனையும் போக்குகின்றது.

 

நுரையீரல் பிரச்சினைகள் தீரும்

முசுமுசுக்கை இலைகளை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அம்மியில் அரைத்து சூட்டில் வதக்கி, அதை உணவில் கலந்து சாப்பிட்டு வரும் போது, சுவாச பாதிப்புகள் காரணமாக சரியாக சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகும்.

 

குறட்டையை நிறுத்தும்

தினமும் முசுமுசுக்கை இலைகளை துவையல் போல உணவில் சேர்த்தோ அல்லது அடை போல செய்தோ சாப்பிட்டு வரும் போது, குறட்டை பாதிப்புககள் விரைவில் நீங்கி, அனைவரும் சுகமாக உறங்க வாய்ப்பாக அமையும்.

 

மன அழுத்தத்தை சரி செய்யும்

சிலருக்கு சுவாச பாதிப்புகளால், மனம் ஒருநிலைப்படாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும், இதனால் அதிகளவான இரத்த அழுத்தம் ஏற்பட்டு, எல்லோரிடமும் எரிச்சல் மற்றும் கோபம் ஏற்பட்டு, அதன் காரணமாக யாவரும் அவரிடமிருநது விலகும் போது ஒரு தனிமையில் தவிக்க வேண்டி ஏற்படும் போது அப்பாதிப்பையும் முசுமுசுக்கை நீக்கும்.

 

உடல் சூட்டினை குறைக்கிறது

மேலும், சுவாச நரம்புகளில் உள்ள தொற்றைக் களைந்து, சுவாசத்தை சீராக்குவதுடன், வாந்தி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் நிவாரணமளிப்பதுடன், உடல் எரிச்சல் மற்றும் சூட்டின் பாதிப்புகளையும் போக்குகின்றது.

 

சளித்தொல்லைகளை இல்லாமல் செய்கிறது

சிறுவர் சிறுமியருக்கு ஏற்படக் கூடிய ஒவ்வாமை மற்றும் சக பிள்ளைகளுடன் விளையாடும்போது ஜலதோச தொற்று ஏற்பட்டு, மூக்கில் நீர் ஊற்றும் சளித்தொல்லை மற்றும் இருமல் போன்ற பாதிப்புகளை சரி செய்ய, முசுமுசுக்கை வேரை சாறெடுத்து, அந்தச் சாற்றில், பனை வெல்லம் கலந்து, சாப்பிட வைக்க, மூக்கில் நீர் ஒழுகும் சளித் தொற்று பாதிப்புகள் விலகி, சுவாசம் சீராகி, பிள்ளைகள் மீண்டும் இயல்பாகி விடுவார்கள்.

 

கண், உடல் எரிச்சல் சரியாகும்

முசுமுசுக்கை இலைகளை, நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, வார இறுதியில், சனிக்கிழமைகளில் இந்த எண்ணையை உடலில் தேய்த்து குளித்து வரும் போது, உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் மற்றும் உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி அடைவதுடன், முடி உதிர்வதைத் தடுத்து, இளநரை பாதிப்புகளையும் சீராக்கும்.

 

முசுமுசுக்கை குடிநீர், மற்றும் முசுமுசுக்கையில் செய்த துவையல், மற்றும் பொரியல் போன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டு வரும் போது, மன நல பாதிப்புகள் சரியாகி, உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், காண்பவர் மகிழும் வண்ணம், முகமும் அமைதியாகி, பொலிவாகும். இரத்தம் சுத்தமாகி, அதிக இரத்த அழுத்த பாதிப்புகள் விலகி, உடல் நலம் மேம்படும்.

 

இருமலால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளை சீர் செய்து, சளியைப் போக்கி, உடலை வலுவாக்குவதுடன், இரத்தத்தில் கலந்த நச்சுக்களையும் வெளியேற்றும்.

 

வீட்டில் உள்ள அனைவரும் முசுமுசுக்கையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வருவதன் மூலம், சளி இருமல் போன்ற பாதிப்புகளிலிருந்து விலகி, சிறப்பான உடல் நலத்தைப் பேண முடியும்.

 

முசுமுசுக்கை தோசை…

மேலும், முசுமுசுக்கை இலைகளை அரைத்து, அத்துடன் அரிசி மாவு, இஞ்சி, மிளகு ஜீரகம் இந்துப்பு சேர்த்து, நன்கு கெட்டியாக மாவை பிசைந்துகொண்டு, கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி அடைபோல செய்து சாப்பிட்டு வரும் போது, சுவாச பிரச்னைகள் தீருவதுடன், இரத்தம் சுத்தமடைதல் மற்றும் தும்மல், குறட்டை போன்ற பாதிப்புகளும் நீங்கும்.

 

ருசியின்மை சரியாக

ஊறவைத்த சிறிது புழுங்கல் அரிசியுடன் சிறிது முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, தோசையாக்கி கல்லில் இட்டு சாப்பிட்டு வரும் போது, சளி மற்றும் காய்ச்சலின் தீவிரத்தால் நாவில் ஏற்பட்ட ருசியின்மை மாறி, சளித்தொல்லையும் விலகும்.

 

கடுமையான சுவாச பாதிப்புகளான ஆஸ்துமா மற்றும் டி.பி. எனும் எலும்புருக்கி வியாதிகளை முசுமுசுக்கை சீராக்குவதுடன், நுரையீரலை சீராக்கி, உடல் நலம் பேணுவதுடன், உடலில் உள்ள தொற்றுக்கிருமிகளின் பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகி, மனம் புத்துணர்ச்சி அடையும்.