மூட்டுவலி மற்றும் வாதநோய் போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்...

 மூட்டுவலி மற்றும் வாதநோய்  

போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்...


பொதுவாக மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மேல் மட்டுமே வளரக்கூடிய இந்த வகை  தாவரத்திற்கு வேர் கிடையாது. பாறையில் உள்ள சத்துக்களையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி வளர்பவை இந்த தாவரங்கள். 

ஆட்டின் காலை போன்ற உருவத்தை கொண்டுள்ள இக்கிழங்குகள்  
முடக்கு வாதத்தால் ஏற்படும்…… 

கால் பிரச்சினை , 
மூட்டு வலி, 
கர்ப்பப்பை சுருங்குதல், 
சிறுநீரக சுருக்கம், 
உள்ளுறுப்பு சுருங்கள், 
புற்று நோய், 
குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய், 
கழுத்து வலி, 
முதுகு வலி, 
தோள் பட்டை வலி 

போன்றவைகளை குணப்படுத்தும் அருமருந்தாகும்.

முடத்தை  போக்க கூடிய ஆட்டுக்கால் போன்ற தோற்றத்தை கொண்ட கிழங்குதான் முடவாட்டுக்கால் கிழங்கு இந்த மூலியை கிழங்கு காய கல்பமாக பயன்படுத்தப்படும் அரிய மூலிகையாகும்.

மூட்டு பிரச்னையால் அவதிப்படுவோர் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து இரவு தூங்கும் முன் குடித்து வர விரைவில் முட்டுவலி குணமாகும். 

மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோயினைப் போக்க கொதிக்கும் நீரில் சிறுதளவு முடவாட்டுக்கால் கிழங்கை போட்டு தினமும் குழந்தையை குளிக்க வைத்து வந்தால் வாத நோய் விரைவில் குணமாகும்.

இந்த கிழங்கில் உள்ள முடி போன்ற தோலினை சுரண்டி  அதனை சுடு நீரில் போட்டு குளித்து வர தோல் அலர்ஜி, தோலின் மீது ஏற்படும் தேமல் அரிப்பு போன்ற எத்தகைய தோல் வியாதிகளும் குணமடையும்.

மூட்டு பிரச்னையால் அவதிப்படுவோர் இந்த கிழங்கினை சூப் வைத்து இரவு தூங்கும் முன் குடித்து வர விரைவில் முட்டுவலி குணமாகும். சவ்வு தேய்மானத்தால் மூட்டு வலி ஏற்பட்டிருந்தால் விரைவில் குணமாகும் .மாறாக வாதம், கபம் போன்றவற்றால் வலி உருவாகி இருந்தால் வாதம், கபம் களைந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி உண்டாகும்.

அவ்வாறு வலி ஏற்பட்டால் உணவில் தக்காளி, புளிப்பு ஆகியவற்றை குறைத்துக்கொண்டு, கிழங்கு கொண்டு செய்யப்படும் சூப்பில் கொஞ்சம் கூடுதலாக சீரகம், மிளகு சேர்த்து குடித்து வர விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்யும் முறை...

அனைத்து மூலிகை கடைகளிலும் கிடைக்கும் முடவாட்டு கிழங்கை. தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்துகொள்ள வேண்டும். கிழங்கின் மேல் உள்ள முடி போன்ற தோலை மெதுவாக சுரண்டி எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்...

முடவாட்டு கால் கிழங்கு   50 கிராம்

மிளகு            - 20 எண்ணிக்கை

சீரகம்             - 1/4 டீஸ்பூன்

காய்ந்த குண்டு மிளகாய்      - 2

சின்ன வெங்காயம்    - 2

தக்காளி         -       1

பூண்டு            - 2 பல்

சூப் செய்த பின் சேர்க்க வெண்ணெய், தேவைக்கேற்ப கல் உப்பு
 

செய்முறை...

தேவையான  பொருட்களை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும் (சட்னி போல் அரைக்க கூடாது) பின்னர் அரை லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியளவு சுண்டியவுடன் இறக்கி வெண்ணெய், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

இதனை குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கொடுப்பதாக இருந்தால் வடிகட்டிய பின் சிறிது வெண்ணை சேர்த்து சுவைக்கேற்ப கல் உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும்.  மற்றவர்கள் வடிகட்டாமல் வெண்ணெய், கல் உப்பு சேர்த்து அப்படியே குடிக்கலாம். 

 இரவு சாப்பாட்டிற்கு பின் அரை மணி நேரம் கழித்து இந்த சூப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்

 இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர……… 

கடுமையான முழங்கால் வலி, 

குதிகால் வலி, 

முழங்கால் சவ்வு பலவீனம், 

தசை பிறழ்சி ஆகியன நீங்கும். 

குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், 

உடல் முழுவதும் தோன்றும் வலி, 

அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.