கரு ஊமத்தை

 கரு ஊமத்தை

                

    கரு ஊமத்தை ஒரு  மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள தாவரமாகும். ஊமத்தையின் மருத்துவ குணங்களை காட்டிலும் இது அதிகப் படியான மருத்துவ குணங்களை உடையது,  வாத வேலைகளிலும் பயன்படுகிறது. திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும்.

 

ஊமத்தையின் மருத்துவ குணங்கள்...

 தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு உள்ளிட்டவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் பயன்படுகிறது. அறுவை சிகிச்சையின் போதும், மகப்பேறின் போதும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

 

சிவனுக்கு உகந்தது:

 பழங்கால இந்திய மருத்துவம் மற்றும் இலக்கிய நூல்களில் ஊமத்தை சிவசேகரம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது; ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது

 

வாதம், வலிகளுக்கு:

இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெறிக்கட்டுதல் ஆகியவை குணமடையும்.

 

காது வலிக்கு

இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச் சீதளத்தால் வந்த காது வலி தீரும்.

 

நாய்க்கடி விஷத்திற்கு:

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில் கட்ட ஆறும். துளிச் சாறு வெல்லம் கலந்து காலை, மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும். பத்தியம் : பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

 

புண்கள் ஆற:

இலைச் சாற்றைச் சமஅளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து ரணத்தில் வெளிப்பூச்சாகப் பயன்படுத்த  சதை வளரும் புண்புரைகள் தீரும்.

 

தலையில் புழுவெட்டிற்கு:

 ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும், புழு இறந்து முடி வளரும்.

 

இயற்கை இன்ஹேலர்:

 இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உடனே குறையும்.

              

பில்லி, சூனியத்திற்கும்:

ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். நஞ்சுத்தன்மையுடையது. இதன் நஞ்சு முறிய தாமரைக் கிழங்கை அரைத்து பாலில் இரு வேளை மூன்று நாள் கொடுக்கலாம்.  இதன் காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.

 

சித்தப்பிரமை, பைத்தியம் குணமாக:

 ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்  போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் சித்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்

 

ஆறாத சர்க்கரை நோய், குழிப்புண்களுக்கு:

 ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும் மேல் பூச்சாக இட குணமடையும். மேகப் புண், நீரிழிவுப்புண், ஆறாத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

 

கட்டிகள் கரைய:

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌  கீல்வாயு குணமாகும்.

 

தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.

வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

 

இதன் காய், விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.

 

கரு ஊமத்தையின் பயன்பாடுகள்:

                'பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்படாமல் செய்ய வேண்டியது.

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".

அதன் பிறகு கருஊமத்தை இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும். மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிட வாய்ப்புண்டு. இது கரு ஊமத்தையின் தனிப்பட்ட குணமாகும்.

 

சக்தி வாய்ந்த இரசமணி கட்ட:

               கருஊமத்தை மிகவும் சக்தி வாய்ந்தது இதில் ரசமணி கட்டினால் அளவிட முடியாத சக்தியை வாரி வழங்கும்  என நம்பப்படுகிறது. கரு ஊமத்தையின் காயை சிறு துளையிட்டு அதனுள் ஒரு பலம் ரசத்தை விட்டு அதை மூடி விட்டு  ஒரு மண்டலம் கழித்து எடுத்து பார்க்க ரசம் திரண்டு மணியாயிருக்கும் . அதை முறைப்படி பூஜைகள் செய்து உபயோகிக்க நினைத்த மாத்திரத்தில் கவுனம் போகலாம்.

 

               ஊமத்தை கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும், வெறியையும் கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது.

 

                இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

                    

பொன் ஊமத்தை:

             ஊமத்தையின் வகைகளில் அரிதான மற்றொன்று பொன் ஊமத்தை ஆகும்‌.இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும். இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம். 

 

                    இதன் இலையை இடித்து பிழிந்து சாறெடுத்து ரவி என்ற வெயிலில் காயவிடவும். பின்பு தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுச்சாறு ஊற்ற வேண்டும். இதுபோல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும். ஆனால் முறையான குருமார்களின் பயிற்சி மற்றும் மேற்பார்வை இன்றி இதை யாரும் செய்ய இயலாது.