எச்சரிக்கைப்பதிவு...
மீன் பற்றிய எச்சரிக்கைப் பதிவு...
கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன் நம்முடைய ஆரோக்கியத்திற்கு
மிக முக்கியமான ஆரோக்கியம் தரும் ஒரு அற்புத உணவாக கருதப்படுகிறது.
நாற்பத்திரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் மீன்களை
பிடித்து சாப்பிட தொடங்கினர் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
மனித மூளையின் பரிணாம வளர்ச்சி அளவு கடந்து அதிகரித்ததற்கு
காரணம் அதிக அளவு கடல் உணவு சாப்பிட்டதால்தான் எனவும் மருத்துவ ரீதியாகவும்
சொல்லப்படுகிறது.
காரணம் கடல் உணவில் நம்முடைய மூளைக்கு தேவையான
ஊட்டச்சத்துக்கள் மற்றும் அயோடின், புரதம் போன்றவை மீனில் அதிக அளவில்
காணப்படுகின்றது.
கடல் மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது நம்முடைய மூளை
மற்றும் இதயத்திற்கு மிகவும் நல்லது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒமேகா 3 கொழுப்புகள் உங்களுடைய தோலை ஆரோக்கியமாக்கி பளபளப்பாக
மாற்றுகின்றது. முதுமை காலத்தில் கொலாஜன் சிதைவால் ஏற்படக்கூடிய தோல்
சுருக்கங்களையும் இது பெரிய அளவில் குறைக்கின்றது.
கடல் மீனில் உள்ள DHA என்னும் வேதிப்பொருள் குழந்தைகளுக்கு
அதிகமான செயல்திறனை அளிக்கிறது.
மீனில் கலக்கப்படும் பார்மலினால் புற்றுநோய் ஏற்படுமா? அல்லது
பிற ஆபத்து வருமா என்பதை விரிவாக பார்ப்போம்..
மீன்கள் பொதுவாக வேகமாக கெடக்கூடிய ஒரு உணவுப்பொருள். மீனை
பிடித்த உடனே அதனை முறையாக பாதுகாக்கவில்லை என்றால் அது கெட்டுப் போய்விடும். மீன்
கெட்டுப் போகாமல் இருக்க அதை ஐஸில் வைத்து பாதுகாப்பார்கள்.
இது பரவாயில்லை ஆனால் சிலர் சில மோசமான கெமிக்கல்களை சேர்த்து
மீனை பாதுகாக்கிறார்கள். இதுதான் நமக்கு மோசமான பின்விளைவுகளை தருகின்றது. சிலர்
இந்த மீன்களை அதிக காலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க பார்மலின், அமோனியா போன்ற
வேதிப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
இது நம்முடைய உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த
பார்மலின் என்பது பார்மால்டிஹைடு என்னும் வேதி பொருளின் கரைசலாகும். தண்ணீரின்
அளவில் 40 சதவிகிதம் அளவிற்கு கலக்கும் பொழுது பார்மலின் உருவாகிறது. இது ஒரு
நிறமற்ற வேதிப்பொருள்.
இந்த பார்மலின் மருத்துவ துறையில் கிருமி நாசினியாகவும்
பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் கலந்த நீரில் இறைச்சி தாவரம்
இப்படி எந்த பொருளை போட்டு வைத்தாலும் அது கெட்டு போகாமல் நீண்ட நாள்கள்
இருக்கும்.
இப்படி மீன்களும் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க இப்படி
செய்யப்படுகிறது. ஏன் ஐஸை தவிர்த்து இப்படி செய்யக்காரணம் என்றால் ஐஸை கொண்டு மீனை
பதப்படுத்தும் பொழுது அதற்கான செலவு அதிகமாகிறது. இதனால் ஒருலர் இப்படி மோசமான
செயல்களை செய்கிறார்கள்.
தீமைகள்..
இதனால் நம்முடைய உடல்நலம் மோசமாக பாதிக்கும். பல உடல்நல
பாதிப்புகள் நமக்கு ஏற்படும்.
புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும். குமட்டல்,
கண் எரிச்சல், தோல்,தொண்டை,வயிறு போன்ற இடங்களில் எரிச்சல் ஏற்படும்
வயிற்றுவலி ஏற்படும்.
எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்
மீன் இறுக்கமாக இருத்தாலோ அல்லது அதிக துர்நாற்றம் வீசினாலோ
மீன் வாங்க வேண்டாம்.
உங்களுக்கு நன்கு தெரிந்த பரிச்சயமான கடைகள் மற்றும்
வியாபாரிகளிடம் இருந்து மீனை வாங்குதல் நல்லது.
விலை குறைவாக சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மீனில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வாங்குவதை தவிர்த்துவிட
வேண்டும்...
நல்ல விஷயங்களை அடுத்தவருக்கு பகிருங்கள்.