ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் கருப்பு ஏலக்காய்

 

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் கருப்பு ஏலக்காய் !!

 

ஏலக்காயில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின்கள் B1, B2, B3, A போன்றவை  உள்ளது.

 

'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.

ஏலக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்கி வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது. ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

 

மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும்  மணமாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.

 

விரைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படும் ஆண்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள சினியோல் என்னும் வேதிப்பொருள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

 

ஏலக்காயை அடிக்கடி தேநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். மேலும் நரம்பு தளர்ச்சி சரியாகி நரம்புகள் வலுபெறும். ஏலக்காய் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.

 

ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் இரத்தம் இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது. உணவில்  ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது.