சைனஸ் நிரந்தர தீர்வு

 சைனஸ் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் காட்டு முள்ளங்கி வேர்

  

இன்று தூசுக்களுக்கும் மாசுக்களுக்கும் இடையில், மோசமான தட்ப வெப்ப நிலையில் மிக மோசமான சூழல்களுக்கு இடையில் வாழ்ந்து வருகிறோம். அதனால் சைனஸ், ஆஸ்துமா பிரச்சினைகள் மிக அதிக அளவில் இருக்கின்றன. இதை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

​சைனஸ் தலைவலி

சைனஸ் என்பது மூச்சு விடச் சிரமப்படுவது, மூக்கடைப்பு, எப்போதும் சளி பிடித்துக் கொண்டிருப்பது போ்ன்ற அறிகுறிகளும் ஒவ்வாமைகளும் இருக்கும். அதைவிட, நாம் தலைவலிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிறோம். சைனஸ் பிரச்சினையின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று தலைவலி என்பது நம்மில் நிறைய பேருக்குப் புரிவதே இல்லை. சைனஸ் தலைவலி மூக்கு துவாரங்களைச் சுற்றிலும் மட்டுமல்லாது தலையைச் சுற்றிலும் இடி இடிப்பது போல, மிகுந்த வலியைத் தரும்.

முகத்தை சுற்றிலும் அதிகப்படியான சளி கோர்த்துக் கொண்டு தொந்தரவு கொடுப்பது தான் சைனஸ் ஏற்படுவதற்கான காரணமாகும். எளிதாகப் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், சளி சவ்வுப் படலமானது வீக்கமடைந்து நெற்றியில் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை ஏற்படுத்தி முகத்தில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. நாம் பெரும்பாலும் இந்த நோயின் தீவிரத்தை உணராமல் மோசமான பின் விளைவுகளை புறக்கணிக்கிறோம். இந்த பிரச்சினை நாள்பட இருந்தால் நீங்கள் எப்போதும் மருந்துகளை நம்பியே இருக்க வேண்டி இருக்கும்.

இருந்தாலும் சில இயற்கையான நிவாரண வழிகள் இந்த அறிகுறிகளை போக்க உதவும். என்னை கேட்டால், உண்மையில் இந்த இயற்கையான, செய்வதற்கு எளிமையான வீட்டு மருந்துகளைக் கொண்டு சைனஸுக்கு நிவாரணம் பெறலாம். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் ஆண்டுக் கணக்கில் மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். லேசாக குளிரடித்தாலும் இவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள மிக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அற்புத மருந்து ஒன்று உண்டு. அந்த அற்புத மருந்தை நம்முடைய வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

 

​காட்டு முள்ளங்கி மருந்து

காட்டு முள்ளங்கி வேரை வைத்து, அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து தயாரிக்கப்படும் லேகியம் போன்ற மருந்து சைனஸ் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். அந்த லேகியத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த காட்டு முள்ளங்கி வேரை குதிரை முள்ளங்கி என்றும் அழைப்பார்கள்.

 

எப்படி செய்வது?

இந்த லேகியத்தைத் தயாரிக்க முதலில் காட்டு முள்ளங்கி வேரை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதை நிழலிலேயே நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் நன்கு உலர்த்திய வேர்களும் அதன் பொடிகளுமே கிடைக்கின்றன. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். இந்த முள்ளங்கி வேரை மிக்ஸியில் போட்டு நன்கு மை போல, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை அரைத்து முடித்த பிறகு, கொஞ்சம் சூடு குறைந்ததும், அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் அரை கப் அளவு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு அரை கப் தேனையும் ஊற்றி நன்கு கலந்து, அதன் மேல் ஒரு மெல்லிய வெள்ளை நிற பருத்தித் துணியை கொண்டு மூடி, இருட்டான, வெளிச்சம் படாத பகுதியில் 48 மணி நேரம் வைத்து விடுங்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதை திறந்து பாருங்கள். திக்கான இருமல் மருந்து பதத்தில் இருக்கும். இதை நீங்கள் கிட்டதட்ட பல மாதக்கணக்கில் வைத்து கூட பயன்படுத்திக் கொள்ள முடியும். கெட்டுப் போகாது. ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் சுமார் ஒரு வருட காலம் வரையிலும் வைத்துப் பயன்படுத்த முடியும்.

 

​எப்படி சாப்பிட வேண்டும்?

இதில் பெரிதாக சுவை எதுவும் இருக்காது. தேனின் இனிப்பு தூக்கலாகத் தெரிய வேண்டுமானால், ஒரு சிட்டிகை அளவு மட்டும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் மருந்தை தேவைப்படும் போது, குறிப்பாக தலைவலி, சளி ஆரம்பிக்கிற பொழுதே ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சாப்பிடுங்கள். குறிப்பாக, இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்லுங்கள். காலையில் எழுந்ததும் சிலருக்குத் தும்மலாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அந்த பிரச்சினை உள்ளவர்கள் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்குவது நல்லது.

 

​குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இந்த மருந்தைக் கொடுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். இது இயற்கையான மூலிகையால் தயாரிக்கப்பட்டது. அதிலும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பக்க விளைவுகள் ஏதுமற்ற மருந்து என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். ஒருவேளை பரிசோதித்த பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், ஒரு ஸ்பூன் மருந்தை எடுத்து ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுங்கள்.

குழந்தைக்கு சளித் தொல்லை, சைனஸ் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தது என்றால் அதை தொடர்ந்து கொடுக்க ஆரம்பியுங்கள்.

 

​சுவை எப்படி இருக்கும்?

சைனஸ் தொல்லையால் மூக்கின் உட்பகுதியில் அடைப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையைக் கூட அந்த அடைப்பை இந்த மருந்து நீக்கும். ஏற்கனவே அதிக சளித் தொல்லை. இதில் நிறைய தேன் சேர்த்திருக்கிறோமே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆப்பிள் சீடர் வினிகர் லேசாக காரத்தன்மை கொண்டது. ஆனால் காட்டு முள்ளங்கி வேர் நல்ல காரசாரமாக இருக்கும். அதை அப்படியே உங்களால் சாப்பிட முடியாது. அதோடு இந்த மருந்து கெட்டுப் போகாமல் இருக்க தேன் மிக அவசியம். சுத்தமான தேன் சிறிது கசப்புத் தன்மையோடு தான் இருக்கும். தேனுக்கும் சளியை முறித்து வெளியே தள்ளும் ஆற்றல் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். காரம் உங்களுக்கு ஆகாது என்றால் மிகவும் குறைவாக அளவு மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.

 

​காட்டு முள்ளங்கியின் பயன்கள்

குதிரை முள்ளங்கி என்னும் இந்த காட்டு முள்ளங்கி, இயற்கையாகவே காரசாரமானது. பச்சையான கிழங்கை வாங்கி நீங்கள் நறுக்கும்போது அதிலுள்ள இரசாயனங்கள் நுகர்வு நம்முடைய மூக்கு துவாரங்களின் வழியாக நுகரப்படும் பொழுதே, அதிலுளள காரத்தன்மை சைனஸ் துளைகளுக்குள் செயலாற்றிப் போராடுகிறது.

காட்டு முள்ளங்கிக் கிழங்கை அப்படியே வாயில் வைத்து சப்பியும் அதன் சாறை உமிழ்நீர் வழியே உள்ளே செலுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். குதிரை முள்ளங்கியில் அதிக அளவில் சல்ஃபர் அடங்கியிருக்கிறது. இது நம்முடைய உடலில் மிக இயற்கையாக ஆன்டி-பயாட்டிக்காக செயல்படுகிறது. இது சளியின் தீவிரத் தன்மையைக் குறைத்து மூக்கு துவாரங்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலைப் போக்குகிறது. அதேபோல மோசமான தொண்டைப் புண் மற்றும் அழற்சிக்கு மிகச்சிறந்த மருந்தாக இது இருக்கும்.

தேனைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இயற்கையாகவே அதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. இதமளிப்பதாகவும் தொண்டை எரிச்சலுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. இதனால் தான் தேன், திடீர் மூக்கு அல்லது தொண்டை தொற்றுக்களுக்கு குணமளிக்கும் வீட்டு மருந்துகளில் முன்மையானதாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் மிகச்சிறந்த சைனஸ் நிவாரணி ஆகும். அதிலும் குறிப்பாக, வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகர் சளிப்படலத்தை கரைத்து சைனஸ் அழுத்தத்தை போக்குகிறது. இது சுவாசப் பாதையைச் சுத்தம் செய்து ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்டுகளை வழங்குகிறது. மேலும் இது உடலின் PH அளவுகளை சமநிலைப்படுத்துகிறது.