சொரியாசிஸ் நாட்டு மருத்துவம், சொரியாசிஸ் பாட்டி வைத்தியம்
சோரியாஸிஸ்க்கான வீட்டு வைத்தியங்கள்
சரும நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சோரியாஸிஸ்தான். சோரியாஸிஸ் என்பது சருமத்தில் சில இடங்களில் மட்டும் திட்டுத்திட்டாக தடிப்பது. இந்த இடங்கள் வறண்டு போவதுடன் தனியாக தெரியும். இதில் உள்ள மற்றொரு பிரச்சினை இது ஒரு இடத்தில் வந்துவிட்டால் தொடர்ந்து அருகில் உள்ள இடங்களுக்கு பரவும். ஆனால் சோரியாஸிஸ் மற்றவர்களுக்கு பரவாது. பாதிக்கப்பட்டவரின் உடலில் மட்டுமே பரவக்கூடியது.
Remedies for Psoriasis
சோரியாஸிஸ்-ஐ உடனடியாக சரி செய்ய இயலாது, ஆனால் சில மூலிகைகள் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தலாம். சோரியாஸிஸ்க்கு எந்த மருந்தை உபயோகப்படுத்துவதாய் இருந்தாலும் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் தவறான சோரியாஸிஸ் சிகிச்சை பல ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும். இங்கே சோரியாஸிஸ்க்கான சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.
சோற்றுக் கற்றாழை
கற்றாழை சாறை தினமும் மூன்றுமுறை சருமத்தில் தடவுவது சோரியாஸிஸ்க்கு சிறந்த சிகிச்சையாகும். இது தடித்த பகுதிகளில் உள்ள சிவப்பு நிறத்தையும், அரிப்பையும் குறைக்குமென ஆய்வுகள் கூறுகிறது. 0.5 சதவீதம் கற்றாழை உள்ள க்ரீம்கள் கடைகளில் கிடைக்கும் அவற்றை உபயோகப்படுத்தலாம். ஆனால், கற்றாழை மாத்திரைகளால் எந்த பயனும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள் சீடர் வினிகர்
இது பழங்காலம் முதலே கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சோரியாஸிஸால் ஏற்படும் அழற்சி மற்றும் தடிப்புகளை சரிசெய்கிறது. எளிதில் கிடைக்கக்கூடிய இதனை வாரத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். சிலர் ஆப்பிள் சீடர் வினிகருடன் சமமான அளவு நீர் சேர்த்து தடவும்போது எரிச்சல் இருப்பதில்லை என்று கூறுகின்றனர். ஒருவேளை தடித்த இடங்களில் இருந்து இரத்தம் கசிந்தால் இதனை உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும்.
காப்சைசின்
காப்சைசின் என்பது மிளகாய் மற்றும் மிளகில் இருக்கும் ஒரு பொருளாகும். இதுதான் அவற்றிற்கு காரத்தன்மையை கொடுக்கிறது. காப்சைசின் உள்ள க்ரீம்கள் வலி நரம்புகள் மூலம் பரவுவதை தடுக்கிறது. காப்சைசின் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதிலுள்ள காரத்தன்மை எரிச்சலை ஏற்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர்.
உப்பு
உப்பு சோரியாஸிஸால் ஏற்படும் அரிப்புக்களை சரிசெய்ய சிறந்த மருந்தாகும். நீங்கள் குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் உப்பை கலந்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் அந்த நீரில் குளிக்கும்போது உங்கள் அரிப்புகள் குறையும். குளித்து முடித்த உடனேயே சருமத்தில் மாய்ஸ்சரைசரை தடவினால் விரைவில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸ் சரும நன்மைக்காக இயற்கை அளித்த கொடையாக கருதப்படுகிறது. இது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் ஓட்ஸை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதும், குளிப்பதற்கு உபயோகிப்பதும் நல்ல பலனை அளிப்பதாக இதனை பயன்படுத்திய பலரும் கூறுகிறார்கள். இது சோரியாஸிஸினால் ஏற்படும் தடிப்பை விரைவில் குணமடையச் செய்யும்.
தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெயில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு சக்திகள் இருப்பதால் இதனை சருமத்தின் மீது தாராளமாக பயன்படுத்தலாம். சிலர் தேயிலை மர எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஷாம்புக்களை தலையில் ஏற்படும் சோரியாஸிஸ் பாதிப்புகளை சரிசெய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தலாம், எனவே மருத்துவருடன் கலந்து ஆலோசித்து விட்டு இதனை பயன்படுத்துங்கள்.
மஞ்சள்
மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக புகழ்பெற்றது. மஞ்சளில் உள்ள குர்குமின் அரிப்புகளை குணப்படுத்தக்கூடிய பண்பு கொண்டது. மஞ்சளை தொடர்ந்து உபயோகித்து வந்த நோயாளிகளுக்கு விரைவில் சோரியாசிஸ் குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம் இல்லையெனில் உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். 1.5 முதல் 3.0 வரை FDA அளவுள்ள மஞ்சளை தினமும் சேர்த்து கொள்வது பாதுகாப்பானது.
மஹோநியா
இது எதிர்ப்புசக்தி அதிகம் நிறைந்த வலிமையான ஆண்டிமைக்ரோபியல் மூலிகை ஆகும். மஹோநியா 10 சதவீதம் உள்ள க்ரீம்கள் சோரியாஸிஸை விரைவில் குணப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இது ஆல்கலாய்டு குடும்பத்தை சேர்ந்தது.
சோரியாஸிஸ் சிகிச்சையை மேற்கொள்ள சித்த, ஆயுர்வேத முறையில் முழுமையாக சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147