ஆண்மைக்கு இஞ்சி

 ஆண்மைத் தன்மை அதிகரிக்க இஞ்சி…

 

நம் அன்றாட சமையலில் பயன்படுத்துகின்ற சமையல் பொருளில் ஒன்று இஞ்சி. இப்போது இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் அதனைக் கொண்டு நமக்கு அன்றாட ஏற்படக்கூடிய உடல் உபாதைகளிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன் அதற்கான அறிகுறிகள் தெரிந்த உடனேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மாறாக, நோய் முற்றியவுடன் மருந்து மாத்திரைகளைத் தேடி அலைவது மூடத்தனமானது. அதே போல சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் பயப்படாமல் வீட்டில் சில வைத்திய முறைகளை முயற்சித்துப் பாருங்கள். இரண்டு நாட்களில் அவை குறையாமல் தீவிரமடைந்தது என்றால் அதன் பிறகு மருத்துவரிடம் செல்லலாம். 

 

ஆஸ்துமா:

இஞ்சியை தோல் சீவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அத்துடன் சிறிதளவு தண்ணீர், தேன் மற்றும் மிளகுத் தூளை குழைத்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகள் மட்டுப்படும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். இப்படிச் செய்வதனாலும் ஆஸ்துமா பிரச்சனைகள் தவிர்க்கப்படும். 

 

செரிமானக் கோளாறுகள்:

இஞ்சியில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் செரிமானக் கோளாறினை சரி செய்திடும். இதற்காக நீங்கள் அதிகம் மெனக்கட வேண்டிய அவசியமில்லை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி மென்று சாப்பிடுங்கள். இப்படிச் சாப்பிடுவதினால் செரிமானக் கோளாறுகளிலிருந்து தப்பிக்கலாம் என்பதுடன் காலையில் ஏற்படுகிற சோர்விலிருந்து உங்களை மீட்டெடுக்க உதவிடும். 

 

அதீத சோர்வு:

அடிக்கடி நாம் சந்திக்கிற பிரச்சினைகளில் ஒன்று இது. நன்றாக சாப்பிட்டிருப்போம், சீரான தூக்கமும் இருக்கும் ஆனாலும் அதிக சோர்வுடன், தூக்கம் கண்களை சொருகும். அப்படியான நேரத்தில் உங்களுக்கு கை கொடுப்பது இஞ்சி தான். ஒரு கிளாஸ் தண்ணீரில் இஞ்சி,ஒரு துண்டு எலுமிச்சை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் உடனடி நிவாரணம் கிடைத்திடும்.

 

சளித் தொல்லை:

வைரஸ் காய்ச்சல் உட்பட பலதுக்கும் மூலக்காரணியாக இருப்பது சளித்தொல்லை தான். லேசாக சளிப் பிடித்திருந்தது. ஒரு வாரத்தில் இப்படி அதிகரித்து விட்டது என்று பலரும் புலம்புவதை கேட்டிருப்போம். அவர்களுக்கு இது உதவிடும். சூடான தண்ணீரில் இஞ்சி டீ தயாரித்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்திடுங்கள். நெருப்பில் சுட்ட இஞ்சியை மார்பு பகுதி, தொண்டை பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். 

 

புகைப்பழக்கம்:

புகைப்பழக்கம் எப்படியோ நம்மை ஆட்கொண்டு விட்டிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவது என்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. இஞ்சியை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தினமும் காலையில் ஒரு ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்டினை சாப்பிடுங்கள். கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையுடன் முதலில் ஒமட்டல் எடுக்கும் தொடர்ந்து இப்படிச் சாப்பிட்டு வர, புகையை நாடும் தன்மை குறைந்திடும். 

 

ஆர்த்ரைட்டீஸ்:

ஆர்த்தரைட்டீஸ் வலியினால் முதியவர்கள் பலரும் அவதிக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க இந்த முறையை பின்பற்றலாம். வலியுள்ள இடத்தில் இஞ்சியை நெருப்பினால் சுட்டு அதனை வலியுள்ள இடத்தில் அழுத்தி ஒத்தடம் கொடுத்திடுங்கள். 

 

தசை பிடிப்பு:

வலியைத் தாண்டி அவ்வப்போது தசை பிடிப்பு உண்டாகிறதா? அதனை தவிர்க்க இஞ்சி பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கிடும் இதனால் தசைப் பிடிப்பு தவிர்க்கப்படும். இஞ்சி டீ தயாரித்து குடித்திடுங்கள். 

 

நோய்த் தொற்று:

இஞ்சியில் இருக்கக்கூடிய ஆன்டி-பாக்டீரியல் துகள்கள் மற்றும் ஆன்டி-வைரஸ் துகள்களினால் நம் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய நோய்த் தொற்றினை எளிதாக தவிர்க்க முடியும்.தொடர்ந்து இஞ்சிச் சாறு குடித்து வர, சிறுநீர் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். பிரச்சினையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் அதனை சரி செய்திடும். 

 

நோயெதிர்ப்பு சக்தி:

இஞ்சி ஆன்டி-ஆக்ஸிடண்ட் மட்டுமின்றி இரும்பு, கால்சியம், பொட்டாசியம், புரோட்டீன், செலினியம், மக்னீசியம் உட்பட ஏராளமான மினரல்ஸ் இருக்கின்றன. இத்தகைய சிறப்புகள் நிறைந்த இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொதிக்கிற நீரில் சேர்த்திடுங்கள். பின்னர் பத்து நிமிடம் கழித்து அந்த நீரை வடிகட்டி குடிக்கலாம். 

 

மைக்ரேன் தலைவலி:

இருப்பதிலேயே மிகவும் வலிமிகுந்தது என்றால் மைக்ரேன் தலைவலியை குறிப்பிடலாம். இந்த வலியை போக்குவதில் கூட இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. இஞ்சியை கொதிக்க வைத்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வர மைக்ரேன் தலைவலி வராமல் தவிர்க்க முடியும். 

 

துர்நாற்றம்:

உடலில் ஏற்படுகிற ரசாயன மாற்றங்களினால் தான் துர்நாற்றம் ஏற்படுகிறது. சிலர் அதற்காக பல்வேறு பேஸ்ட்டுகளை மாற்றிக் கொண்டு, பலன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு இஞ்சி மிகச்சிறந்த நிவாரணமாக விளங்கிடும். இஞ்சியை லேசாக சூடுபடுத்தி கடித்துச் சாப்பிடலாம் அல்லது இஞ்சிச் சாறு எடுத்து குடிக்கலாம். இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

 

ஆண்மை:

இஞ்சி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்திடும். அதே சமயம் இஞ்சி பாலியல் உணர்வினையும் தூண்டக்கூடியது. இஞ்சி சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்படாது என்பதாலும், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்பதாலும் இஞ்சியை சாப்பிடுவதற்கு முன்னால் பயம் கொள்ளத் தேவையில்லை. ஒரு நாளைக்கு நான்கு கிராம் அளவு வரை மட்டும் சாப்பிட வேண்டும். இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். 

 

உடல் எடை:

இஞ்சி சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைவான தன்மை கிடைக்கும். குறைவான உணவினை எடுக்கும் போதே அவை உங்களுக்கு போதுமென்ற உணர்வினைக் கொடுத்திடும். அதனால் கூடுதலாக நீங்கள் உணவு எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.அதே போல கொழுப்பினைக் கரைக்கவும் உதவுவதால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். 

 

புற்றுநோய்:

இன்றைக்கு பலரையும் அச்சுறுத்துகிற கொடிய நோயென்று சொன்னால் புற்றுநோயைக் குறிப்பிடலாம். அதன் தாக்கத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் இஞ்சியில் நிறையவே இருக்கிறது மார்பகம், குடல், சருமம், கணையம், ப்ரோஸ்டேட் ஆகிய இடங்களில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களை பரமாவல் தடுக்க இஞ்சி உதவிடுகிறது. 

 

இரத்த அழுத்தம்:

இஞ்சி தொடர்ந்து எடுத்து வர, அவை நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இன்சுலின் உதவியின்றியே குறிப்பிட்ட அளவு வரை சர்க்கரையை நம் இரத்தத்தில் பராமரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் குறைவது அல்லது திடீரென்று அதிகரிப்பது ஆகியவை தடுக்கப்படும்.அனைத்து விதமான ஆண்மைக் குறைவு பிரச்சினைகளையும் பக்க விளைவுகள் இல்லாமல் நிரந்தரமாக சரி செய்ய எங்கள் K7 HERBO CARE-ஐ தொடர்பு கொள்ளவும்

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

ஆண்மை குறைவு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, ஆண்மைக் குறைவு Home Page-ற்கு செல்லவும்

ஆண்மை குறைவு Home Page