சர்க்கரை நோய் அறிகுறிகள், நீரிழிவு நோய் அறிகுறிகள்

 சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

 

சர்க்கரை நோய் பெரும்பாலான மக்களை அவதிப்படுத்தும் நோய்களில் ஒன்றாக விளங்குகிறது. சர்க்கரை நோய் என்பது கணையத்தில் இன்சுலின் குறைபாடு ஏற்படுவதே இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் பரம்பரை பரம்பரையாக பரவும் நோய் என்று சொல்லலாம். அதாவது நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இரத்த வழி உறவினர்களுக்கு இந்த சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்த சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த சர்க்கரை வியாதி உலகில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்கில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும், இந்தியாவில் இதன் விகிதம் அதிகம் அதாவது மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உறுதியளிக்கப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறப்படுகிறது. இந்த நீரிழிவு நோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்ற நிலை மாறி, சிறிய குழந்தைகளுக்கும் இப்போதேல்லாம் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இருந்தாலும் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதே பலருக்கு தெரிவதில்லை, ஆறாத புண்களுக்காக மருத்துவரை அணுகும் போதுதான் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதை தெரிந்துகொள்கிறோம்.

இந்த சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே அறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொண்டால் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பித்துவிடலாம். சரி இந்த பதிவில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பசி:-

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்கள் உணவருந்திய பிறகும் பசிப்பது போல் இருக்கும். இவ்வாறு பசிப்பது போல் இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

ஆறாத புண்:-

சர்க்கரை நோய் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர்களுக்கு ஏற்படும் புண்கள் அவ்வளவு சீக்கிரமாக ஆறாது. அந்த புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும், ஆறாத புண்களும் சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறியாகும்.

பாதங்களில் வலி:-

ஒருவருக்கு பாதங்களில் வலி, கூச்சம் மற்றும் உணர்வில்லா தன்மையாக இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

பிறப்புறுப்பில் கட்டி:-

குறிப்பாக ஆண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் சிறு கட்டிகள் அல்லது புண்கள், அரிப்பு மற்றும் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை குறைதல் போன்றவை சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது:-

ஒருவருக்கு அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் கலந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இதனை வைத்தே அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.

தாகம் மற்றும் உலர்ந்த வாய்:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து நாக்கு வறட்சியாகவும் மற்றும் தாகமாகவும் இருக்கும்.

பரம்பரையாக வரும் சர்க்கரை நோய்

பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும்.

உடற்சோர்வு, அசதி

சர்க்கரை நோயாளியின் உடல், உடலில் உள்ள சேமித்து வைத்தசர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

திடீரென்று எடை கூடுதல் அல்லது குறைதல்

மங்கும் பார்வைத்திறன், எடை கூடுதல் அல்லது குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர்த் தொற்று, நீர்ச் சமநிலைக் குறைபாடு.

 

 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page