சர்க்கரை நோய் பாதிப்புகள், சர்க்கரை நோய் பாதிப்பு
சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, இரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் "ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.
கண்ணில் விழித்திரையை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக இரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.
பல்வேறு காரணங்களில், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை இருக்காது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். விளைவு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.
சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அவர்களது கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்படுவதுடன் அதில் உள்ள இரத்த நாளங்கள் பலவீனமாகும். ஆரம்பத்தில், எவ்வித அறிகுறியும் இருக்காது. முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும்.
ஆரம்ப நிலைகளில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், கண் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து கண்களைப் பரிசோதனை செய்து கொள்ளவும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் பார்வையிழப்பு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
- Diabetic Macular Edema: விழித்திரையின் இரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது, திரவம் வடியத் தொடங்கும். இந்த திரவம், விழித்திரையில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பார்வையிழப்பு ஏற்படும்.
- Proliferative Diabetic Retinopathy: விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் வளரும். இவை, பலவீனமாக இருப்பதுடன் விரைவில் உடைந்தும் விடும். இதனால் திரவம் வடியத் தொடங்கி, திடீரென பார்வையிழப்பு உண்டாகும்.
கால் பாதுகாப்பு
சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீல் கோர்க்கும். இரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147