அருகம்புல் ஜூஸ்...

அருகம்புல் ஜூஸ்...

தேவையான பொருட்கள்: 
அருகம்புல் - அரை கட்டு 
சுக்குத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
பனங்கருப்பட்டித்தூள் - ஒரு டீஸ்பூன், 
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை...

அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அதனுடன் நீர்விட்டு நன்கு மையாக அரைத்து வடிகட்டி எடுக்கவும். பிறகு அதில் சுக்குத் தூள், பனங்கருப்பட்டிதூள், சீரகத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து வடிகட்டவும். 

தினமும் பெரியவர்கள் 100 மில்லி, சிறியவர்கள் 30 - 50 மில்லி அருந்தலாம்.

பயன்கள்: 

இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, சருமப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். 

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும். 

காலையில் வெறும் வயிற்றில் இதை அருந்தும்போது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றும். 

நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற பல நோய்களுக்கு மருந்தாக அமையும். 

சருமம் பொலிவாக விரும்புவோரும் இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.