காட்டு எலுமிச்சையின் நன்மைகள்...

காட்டு எலுமிச்சையின் நன்மைகள்...

எலுமிச்சையின் மகிமை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சிட்ரஸ் அமிலம் நிறைந்தது, ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்தது, எடை குறைப்புக்கு உதவுவது என்று அதன் நன்மைகள் கணக்கிலடங்காதது. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்தச் சொல்கிறார்கள். இந்த எலுமிச்சையில் காட்டு எலுமிச்சை என ஒன்றும் பலருக்குத் தெரியாத ஒரு வகை இருக்கிறது.

எலுமிச்சையில் நிறைய வகைகள் உள்ளது. எலுமிச்சை எதுவாக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், காட்டு எலுமிச்சையின் மருத்துவ பண்புகள் தனித்துவமானது. காட்டு எலுமிச்சைகளில் சாதாரண எலுமிச்சையை விட சிட்ரஸ் அமிலம் அதிகம். அதே நேரத்தில் இது அதிக ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. இந்த காட்டு எலுமிச்சையிலிருந்து எண்ணெய் மற்றும் சுவை கூட்ட கூடிய விஷயங்களில் புளிப்பு சுவையை கொடுப்பது வாசனை திரவியங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் எலுமிச்சைக்கும், காட்டு எலுமிச்சைக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பார்ப்போம்…

எலுமிச்சை :

எலுமிச்சையை கொதிக்க வைத்து, அதோடு இஞ்சி சேர்த்து குடிக்கும்போது நம் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி கொரோனா வைரஸை அழிக்கிறது. இந்த வல்லமை எலுமிச்சைப் பழத்தில் மட்டுமின்றி, எலுமிச்சையின் தோலிலும் நிறைய உள்ளது. எலுமிச்சையின் தோலைக் கொதிக்க வைத்து, அந்த நீ்ரை பருகுவதால் நிறைய பலன்கள் இருக்கிறது. குறிப்பாக, இரத்தக்குழாய்களில் இருக்கக்கூடிய கொழுப்புகளை நீக்க உதவுகிறது. அதேபோல், உடல் முழுவதும் இருக்கும் கொழுப்புக் கட்டிகளை கரைக்கவும் உதவுகிறது. எலுமிச்சைத் தோலை கொதித்து அந்த நீரை பருகுவதால் புற்றுநோய் தடுக்கப்படும் என்றும் பல ஆய்வுகளில் கூறுகின்றனர். அதேபோல் இதன் புளிப்பு சுவை பொதுவாக உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. உடல்  ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

காட்டு எலுமிச்சை :

காட்டு எலுமிச்சைக்கும் சாதாரண எலுமிச்சைக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், சாதாரண எலுமிச்சைகளில் இருக்கும் வாசனையை விட காட்டு எலுமிச்சையில் வாசனை மிகவும் அதிகமாகவும் அலாதியாகவும் இருக்கும். காட்டு எலுமிச்சையின் சாறு அளவும் அதிகம் உள்ளது. குடல் நோய்கள், சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு காட்டு எலுமிச்சை நல்லது. நண்டு, மீன், கருவாடு, இறால் போன்ற கடல் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும்போது, சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை (Sea sickness) ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் காட்டு எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது  குணமடைகின்றனர். இதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெயை மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். காட்டு எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

எலுமிச்சை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். எலுமிச்சைச் சாற்றை வழக்கமாகக் குடித்து வந்தால், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென் என்கிற வேதிப்பொருளில் இருந்து பாதுகாத்து பெருங்குடல், புரோஸ்ட்ரேட், மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். மேலும் எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சாதாரண சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சைச் சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தைப் பெறலாம். எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம்தான்.

காட்டு எலுமிச்சையின் நன்மைகள் :

* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

* செரிமானப் பிரச்னை, வாயுப் பிரச்னை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சைச் சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்னையை சரி செய்யலாம்.  

* எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால் விரைவில் அதனை நீக்கலாம். மேலும்  பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்னைகளை தடுக்கலாம்.

* காட்டு எலுமிச்சையானது மலைப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் கிடைக்கும். நாம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சையைக் காட்டிலும் மிகவும் சிறிதாக நெல்லிக்காய் அளவில் இருக்கும். காட்டு எலுமிச்சை மரத்தை குருந்தை மரம் என்றும் கூறுவதுண்டு.