உங்கள் எலும்புகளை வலிமையாக்க இதை ட்ரை பண்ணுங்க...

உங்கள் எலும்புகளை வலிமையாக்க இதை ட்ரை பண்ணுங்க :

பசலைக்கீரை எண்ணற்ற சுகாதார நன்மைகள் அடங்கியுள்ள கீரைகளுள் ஒன்று. 

சத்துக்கள்...

இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான கெரோட்டின்கள், அமினோ அமிலங்கள், இரும்பு, அயோடின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்களை கொண்டு இருக்கின்றன. 

அதிலும் பசலைக்கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. 

அந்தவகையில் பசலைக்கீரை கொண்டு ஜூஸ் எப்படி தயாரிப்பது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :

• 2 கப் பசலைக்கீரை 
• ஒரு ஆப்பிள் 
• செலரி சிறிதளவு 
• எலுமிச்சை சாறு சிறிதளவு 
• நட்ஸ் 
• தண்ணீர் தேவையான அளவு 
• தேவையான அளவு சர்க்கரை 

செய்முறை :

• கீரை சாறு தயாரிக்க, 2 கப் கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். செலரி மற்றும் ஆப்பிளை பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். 

• பின்னர், ஒரு பிளெண்டர் ஜாடியில், 3/4 கப் தண்ணீரில் ஆப்பிள் மற்றும் செலரியை சேர்க்கவும். இதில், எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்க வேண்டும். 

• ஜாடி மூடியை மூடி, மென்மையாகும் வரை மிக்ஸி ஜாரில் அரைக்கவும். பழங்களின் துண்டுகள் எஞ்சியிருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

• இதில், சிறிதளவு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது, புதிய கீரை சாறு தயாராக இருக்கின்றது.

ஆரோக்கிய நன்மைகள் :

• கீரையில் உள்ள வைட்டமின் கே எலும்புகளில் கால்சியத்தை உறுதிப்படுத்த காரணமாக இருக்கும் ஆஸ்டியோகால்க் என்ற புரதத்தின் உற்பத்தியை மேம்படுத்த உதவி செய்யும். 

• சன் பிளாக் மற்றும் தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நீல ஒளியை உறிஞ்சி கண்களுக்கு நன்மை விளைவிக்கும், மேலும் கண்களுக்கு மாறுபாட்டை சிறப்பாக கண்டறிய உதவுகிறது. கீரை சாறு உங்கள் உடலில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவி செய்யும். தலைமுடியை ஈரப்பதமாக வைத்திருக்கும் சரும உற்பத்திக்கும் இது அவசியம். அனைத்து உடல் திசுக்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ முக்கியமானதாக உள்ளது. 

மாரடைப்பை தடுக்கிறது

• மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் கொழுப்பு படிவுடன் தொடர்புடைய இதய நோய்களை குணப்படுத்தும். 

• கீரையில் காணப்படும் தாதுக்கள் காரத்தன்மை வாய்ந்தவை மற்றும் நாள் முழுவதும் உங்களை உற்சாகப்படுத்த உதவி செய்யும்.