பற்கள் பராமரிப்பு...

பற்கள் பராமரிப்பு...

உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு உறுப்புக்களும் அவசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பை அகற்றினாலும் அதன் பின்விளைவுகள் இருந்தே தீரும். இதில் பற்களும் உள்ளடங்குகிறது.

பற்கள் என்பதும் கூட உடல் சமநிலையை பேணும் ஒரு அங்கம் ஆகும். அதனால் தான் இரண்டும் பக்கமும், மேலும் கீழும் சம அளவில் பற்கள் காணப்படுகின்றன. பற்களை பிடுங்கும் பொழுது அந்த சமநிலை அற்று போகும். சிலருக்கு வெர்டிகோ என்ற பிரச்சினை உள்ளது. அதாவது தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வு. பற்களின் பிரச்சினையால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே பற்களை பேணுங்கள். அலட்சியம் வேண்டாம்.
பற்பசையை (Tooth paste) உபயோகிக்காமல் விட்டாலே பற்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை மூலிகை பொடிகளை பாவியுங்கள். கடுக்காய், நெல்லிக்காய், கருவேலம்பட்டை, சிறிது உப்பு, சிறிது அடுப்புக்கரி பவுடர் கலந்து உபயோகப் படுத்தலாம்.

என்றும் பல் தூரிகை (Tooth Brush) தெரிவு செய்யும் பொழுது மென்மையான (SOFT) தூரிகையை தெரிவு செய்யுங்கள். மிகவும் அழுத்தி பல்லை விளக்க வேண்டாம். நீண்ட நேரம் விளக்கவும் வேண்டாம். அதிகபட்சமாக 2 நிமிடங்கள் போதும்.

குளிரான, சூடான உணவுகளை உண்ணாதீர்கள். பழங்கள், பச்சைக் காய்கறிகளை அடிக்கடி மெல்லுங்கள்.
கடைகளில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் அனைத்து தீங்கான உணவுகளையும் உண்ணாதீர்கள்.