காலை உணவை தவிர்ப்பதால் ஏற்பட்டும் பின்விளைவுகள்

Breakfast / காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்...

"காலையில் இராஜா மாதிரி அளவு அதிகமா சத்துள்ள உணவு சாப்பிடனும் இரவு பிச்சைக்காரனை போல அளவு குறைவா ('Begger' போல) சாப்பிடனும்"

இதன் பொருள் காலையில் மிகவும் சத்தான ஆகாரம் (உடம்புக்கு தேவையான புரதம் நார்ச்சத்து, வைட்டமின், மினரல்ஸ், மாவுச்சத்து ) சாப்பிடனும் , இரவு குறைவாக சாப்பிடனும்.

ஆனால் பெரும்பான்மையினர் இன்றுள்ள வாழ்க்கை சூழலில் காலை உணவை தவிர்த்து நேராக மதிய உணவு சாப்பிடுகின்றனர் இதன் விளைவுதான்

* நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திடும் இதனால் பல்வேறு உடல் உபாதைகள் வரும்.

* உடலில் இன்சுலின் சுரக்கும் அளவு படிப்படியாக குறைந்து சர்க்கரை நோயாளியாக மாற மிக அதிக வாய்ப்புள்ளது.

* 12 மணி நேர இடைவெளி அதிகரிப்பதால் (Night 8pm to morning 8am)   மாறாக 17மணி நேர இடைவெளி உடலுக்கு தேவையான இயங்கு சக்தி கிடைக்காது. ஆகையால் மூளையின் செயல்திறன் பாதிக்கும், இதனால் மூளைச்சோர்வு உண்டாகும், நரம்பு மண்டலம் பாதிக்கும்

* அதிக இடைவெளி காரணமாக வயிற்றில் அமினோ அமிலம் (Hydrocloric acid ) உணவு ஜீரணத்திற்க்கு பதிலாக குடலை அரித்து வயிற்றில் மற்றும் வாய்ப்புண் வரும் (ulcer).

*  இதய நோய் வருவதற்க்கு 27% வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது

* உடல் பருமன் அதிகமாகும், பெரும்பான்மையோர் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என நினைப்பது தவறு மாறாக உடல் எடை கூடும்.

* உடலின் இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் உண்டாகும். ஆதலால் பல்வேறு நோய்க்கு வழிவகுக்கும் (High /Low Blood pressure )

*  உணவு இடைவெளி அதிகரிப்பால் வாயிலுள்ள /வயிற்றில் நுண்ணுயிரிகள் அழியாது வாய் துர்நாற்றம் வீசும்

*பசியின்மை அதிகரிக்கும்

* குடலிலுள்ள சத்துறிஞ்சி ''வில்லை '' பாதிக்கப்படும்.

* உணவு ஜீரண மண்டலம் பாதிக்கும்.

* தலை வலி மற்றும் தலைச் சுற்றல் வர இதுவும் ஒரு கூடுதல் காரணம்.

மேலும் பல்வேறு உடல் உபாதைகள் வர மிகவும் முக்கியமான காரணம் காலை உணவை தவிர்ப்பதால் வருகிறது

ஆக இனியாவது காலை சத்தான உணவு எடுத்துக் கொண்டு உடல் நலம் காப்போம்.