கல்விமான் சூரணம்...

கல்விமான் சூரணம்..

1.சீந்தில் சர்க்கரை 50கி
2.கோஷ்டம் 50கி
3.திப்பிலி 50கி
4.நாயுருவி 50கி 
5.ஜாதிக்காய் 50கி
6.ஜாதிபத்திரி 50கி
7.கிராம்பு 50கி
8.ஏலரிசி 50கி
9.தண்ணீர்விட்டான் கிழங்கு 50கி
10.வாய்விடங்கம் 50கி
11.மாசிக்காய் 50கி
12.தாளிசபத்திரி 50கி
13.திரிபலா 150கி
14.தூதுவளை 250கி
15.வெண்தாமரை 250கி
16.வல்லாரை 500கி
17. அக்கரகாரம் 100கி
18. கரிசலாங்கண்ணி 250கி

மேற்கண்ட பொருட்களில் சுத்தி செய்ய வேண்டியவைகளை சுத்தி செய்து அனைத்தையும் சூரணமாக்கி கொண்டு அதை ஒரு அகலமான தட்டில் பரப்பி அது மூழ்கும் அளவிற்கு பன்னீர் விட்டு நன்கு காய்ந்ததும் மீண்டும் கல்வத்தில் பட்டு போல் அரைத்து வைத்துக் கொண்டு காலை இரவு உணவுக்குப் பின்பு 500 மில்லி கிராம் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர நல்ல ஞாபக சக்தி புத்தி சாதுர்யம், அறிவு திறமை அனைத்தும் திறம்பட மேம்பட்டு கல்வியில் ஞானவான் ஆவான் (அசைவம் சேர்த்தால் பரவாயில்லை என்பவர்கள் இத்துடன் 5 கிராம் கஸ்தூரி 5 கிராம் அம்பர் மேற்கண்ட சூரணத்தில் சேர்த்து கொள்ளவும்)