கபம் மற்றும் வாதம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நல்லவேளை மூலிகை !
கபம் மற்றும் வாதம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நல்லவேளை மூலிகை...
நல்லவேளை மூலிகைக்கு வேளைச்செடி, நல்வேளை, தைவேளை என்ற வேறு சில பெயர்களும் உண்டு. கிராமம், நகரம் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது இந்த மூலிகை. பல்வேறு நோய்களைத் தீர்க்கும்.
கபம், வாதம்: வேளைப்பூவுடன் தூதுவேளைப்பூ சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து சாப்பிடலாம். சமையலில் வேளைக்கீரையைச் சேர்த்துவர, உடல் சோர்வு நீங்கிப் புத்துணர்வு உண்டாகும். பசியில்லாமல் அவதியுறுபவர்களுக்கு, ‘வேளைப் பூ’ சமையல் சிறந்த பலன் அளிக்கும். இப்படிச் சாப்பிடுவதால் நெஞ்சில் கட்டியிருக்கும் கபம் மற்றும் வாதம் சமநிலை அடையும்.
ENT டாக்டர்
கழுத்துக்கு மேல் காது, மூக்கு, தொண்டை மற்றும் தலைபகுதியில் உண்டாகும் நோய்களைக் களைவதில், தைவேளை கில்லாடி. ‘காது மூக்கு தொண்டை’ ENT நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் எனத் தைவேளைக்குக் கவுரவப் பட்டம் கொடுக்கலாம்.
சளி, வாதத் தொல்லைகள் வராமல் இருக்க
வேளைச் செடியின் இலைகளை நீர் விட்டுக் கொதிக்க வைத்து மோரில் ஊற வைத்து ஊட்டச்சத்துப் பானமாக அருந்தினால் சளித்தொல்லை, வாதக்கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
அதிகப்படியான கொழுப்பை வெளியேற்ற
வேளைக்கீரையுடன் குடைமிளகாய், பூண்டு சம அளவு சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்துவிடும்.
ஆறாத புண்கள் ஆற,
நாள்பட்ட தோல் நோய்கள் குணமாக
தலைவலி, சைனஸ்: நல்லவேளை இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஆறாத புண்களின் மீது தடவினால் புண் சீக்கிரம் ஆறும். வேர் முதல் பூ வரையிலான முழு தாவரத்தையும் வெள்ளைப் பூண்டு சேர்த்துக் காய்ச்சி நாள்பட்ட தோல் நோய்களின்மீது பூசினால் குணமாகும்.
தலையில் உள்ள நீரை வெளியேற்ற
வேளைச்செடியின் பூக்கள் மற்றும் கொழுந்து இலைகளைக் கசக்கிச் சாறு பிழிந்து தாய்ப்பால் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குறையும். நல்லவேளை இலைகளை இடித்து சாறு பிழிந்து அதன் சக்கையை மட்டும் தலையில் வைத்துக் கட்டினால் தலையில் கட்டிய நீர் அகலும்.
சைனஸ் குணமாக
நல்லவேளைச் செடியின் முழுச் செடியையும் இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்தால் சைனஸ் விலகும். இதன் விதைகளை இடித்துப் பொடியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப் புழுக்கள் மலத்துடன் சேர்ந்து வெளியாகும்.