வெள்ளைப்பூண்டு லேகியம் செய்முறை...

வெள்ளைப்பூண்டு லேகியம் செய்முறை...

தேவையான பொருட்கள்:

வெள்ளைப்பூண்டு - 3500 கிராம் 
கல்கண்டு - 350 கிராம்
பெருங்காயம் - 35 கிராம் 
சுக்கு - 35 கிராம்
வால் மிளகு - 35 கிராம்
கடுகு - 35 கிராம்
இந்துப்பு - 35 கிராம்
ஏலம் - 35 கிராம்
ஓமம் - 35 கிராம் 
திப்பிலி - 35 கிராம்
மிளகு - 35 கிராம்
சீரகம் - 35 கிராம்
திரிபலா - 35 கிராம்
வெட்பாலை அரிசி - 35 கிராம்
அதிவிடயம் - 35 கிராம்
வாய்விளங்கம் - 35 கிராம்
ஆவின்நெய் - 400 மில்லி 

செய்முறை :

வெள்ளைப் பூண்டை 1 லிட்டர் தூய்மையான நீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து அதில் கற்கண்டை போட்டு பாகு செய்து பெருங்காயம், சுக்கு, வால்மிளகு, கடுகு, இந்துப்பு, ஏலம், ஓமம், திப்பிலி, மிளகு, சீரகம், திரிபலா, வெட்பாலை அரிசி, அதிவிடயம், வாய்விடங்கம் முதலியவற்றை பொடித்துத் தூவி ஆவின் நெய்யை விட்டு கிண்டி மெழுகு பதத்தில் எடுத்து குப்பியில் அடைத்து பயன்படுத்தவும்.

அளவு:

5 முதல் 10 கிராம் 2 முதல் 3 வேளைகள் உணவிற்கு முன் நன்கு சுவைத்து வெந்நீர் அருந்தவும்.

தீரும் நோய்கள்:

எல்லாவிதமான வாயுக் கோளாறுகள், வாத வலிகள், அஜீரணம் முதலியவற்றைப் போக்கி பசியைத் தூண்டும்.