சர்க்கரை நோயை குறைக்க உதவும் பழங்கள்.:

சர்க்கரை நோயை குறைக்க உதவும் பழங்கள்...

சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைத்தான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.

* சர்க்கரை நோயாளிகள் பழங்களை முற்றிலுமாகவே தவிர்த்து விட வேண்டிய அவசியமில்லை. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்களை பற்றி இங்கு பார்க்கலாம்..

ஆப்பிள்..

* ஆப்பிளில் அதிகம் பைபர் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இது பசியை அடக்குவதுடன் சர்க்கரை அளவில் மாற்றம் இல்லாமலும் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளி ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் குறைவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் உள்ளது.

பப்பாளி..

* பப்பாளியில் குறைவான குளுக்கோஸ், அதிகப்படியான கனிம சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. அதிகளவு இன்சுலின் சுரப்பையும் சீர்ப்படுத்தி விடுவதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

* இதேபோன்று பீச் பழத்திலும் குறைவான குளுக்கோஸ், அதிகப்படியான கனிம சத்துக்கள் உள்ளது.

நெல்லிக்காய்..

* நெல்லிக்காயில் உள்ள பாலிஃபீனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டுமல்லாது இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

பெர்ரீ பழங்கள்..

* இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சத்துக்கள் பெர்ரீ பழங்களில் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்..

* சிட்ரஸ் அமிலம் நிரம்பிய ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளதால் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

* மேலும் ஆரஞ்சில் வைட்டமின் சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதையும் தாராளமாக சாப்பிடலாம்.

கிவி..

* சர்க்கரை நோயாளிகள் கிவி பழங்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு கிவி பழம் சாப்பிடலாம்.

பேரிக்காய்..

* பேரிக்காயில் வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது. காலை உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்.

கொய்யாப்பழம்..

* கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினம் ஒரு பழம் சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.

மாதுளை..

* மாதுளையில் உள்ள சின்ன சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.