இரத்த சோகைக்கு எதிராக போராடும் , அதிக சத்துக்களை கொண்ட ஆப்ரிகாட்...

இரத்த சோகைக்கு எதிராக போராடும் மற்றும் அதிக சத்துக்களை கொண்ட ஆப்ரிகாட்...

தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப் போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை செய்யக்கூடியதுமான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது...

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக் கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக் கூடியதுமான  செம்பும் இதில் நிறைந்துள்ளது. 

தினமும் இந்த ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தால் குடலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதில் அதிகம் கரையும் மற்றும் கரையாத நார் சத்து இருப்பதால்,  உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், நல்ல போஷாக்குடன் இருக்கவும், ஈரத்தன்மை மிகவும் முக்கியம். இந்த பழம் சருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மையை  போதுமான அளவு தந்து எப்போதும் நீரேற்றத்தோடு வைத்திருக்க உதவுகின்றது.

இந்த பழத்தில் வைட்டமின் A மற்றும் பல சத்துக்கள் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. இதனால் கண்களில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் குணமடைந்து, நல்ல ஆரோக்கியம் பெற உதவுகின்றது.