ஆங்கில மருந்துகளால் வரும்பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) குணமாக…

ஆங்கில மருந்துகளால் வரும்
பக்கவிளைவுகள் (SIDE EFFECTS)
குணமாக…

பெரிய நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் போது சில மருந்துகளின் ஒவ்வாமையினால் 

ALLERGY...
நாக்கில் புண், 
நாக்கு வெடிப்பு, 
தொண்டைப் புண், 
மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், 
வயிற்று வலி, 
உடல் சில்லிட்டு போதல், 
வாந்தி, பேதி 

போன்ற பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) உண்டாகலாம். இத்தகைய குறைகளுக்கு அருகம்புல்லை மிஞ்சிய மருந்து வேறு எதுவும் இல்லை.

ஒரு கைப்பிடி அருகம்புல்லையும் ஐந்து மிளகையும் சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து இரண்டில் ஒரு பங்காக வற்ற வைத்து அதிகாலையில் ஒரு டம்ளர் அருந்த மேற்கண்ட பக்கவிளைவுகள் எல்லாம் தீரும்.