குங்குமாதித் தைலம்

குங்குமாதி தைலம் என்பது என்ன?

 

ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு, சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் நிறைய கவனம் தேவைப்படுகிறது. அதனால் 15 பொருட்கள் உள்ள, சருமத்தை  மிருதுவாகவும், ஒளிரவும் செய்யும் செயல்பாடுகளைப் போல் பல வகைகளைக் கொண்ட மூலிகை தயாரிப்பை விட, வேறு எது சிற்ப்பாக இருக்க முடியும. ஆமாம்- இது போன்ற ஒரு பொருள் உண்மையில் இருக்கிறது, அது குங்குமாதி தைலம் என்று அழைக்கப்படுகிறது.

 

குங்குமாதி தைலம் என்பது என்ன?

தென்னிந்தியா முழுவதும், குறிப்பாக கேரளாவில் ஒரு பொதுவான வீட்டு பெயரான ஒரு ஆயுர்வேத மூலிகை எண்ணெய், குங்குமாதி தைலம் குங்குமப்பூவிவிருந்து உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெயின் முக்கிய மூலப்பொருள் குங்குமப்பூ, இது  சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பை மேம்படுத்த தனிப்பட்ட குணத்தைக் கொடுக்கிறது. இந்தத் தைலம், முக சருமத்தின் மீது அதிசயங்கள் செய்யும் பல பொருட்களுடன் சேர்த்து, சந்தனம்,தாமரை மற்றும் மஞ்சள் கொண்டிருக்கிறது இங்கே இந்த தைலம் செய்யும் பல முக்கிய செயல்களில் சில:

 

நிறத்தை அதிகரிக்கிறது

குங்குமாதி தைலத்திலிருக்கும் காவி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளும் உடையது. இதன் விளைவாக, இது ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறமாக சருமத்தை வைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீடித்த காலத்திற்குப் பயன்படுத்தப்படும் போது, குங்குமப்பூ உங்கள் தோலிலிருந்து பழுப்பை நீக்குகிறது மற்றும் உங்களுக்கு ஒரு பிரகாசமான சருமத்தைக் கொடுக்கிறது.

 

சருமப் பிரச்சினைகளை, குறைகளை குறைக்கிறது

வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்றவை சருமப் பொலிவை கெடுக்கிறது. குங்குமாதி தைலம் இந்தப் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான பண்பை கொண்டிருக்கிறது. இது எதிர்ப்பு அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை கொண்ட, மற்றும் சருமப் பிரச்சினைகளின் தீவிரத்தையும்  சருமத்தின் மாசுக்களையும் குறைக்க உதவும் மஞ்சளைக் கொண்டிருக்கிறது.

 

சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது

குங்குமாதி தைல உட்பொருட்கள் சரும வளர்ச்சிக்கு தாவரத் தொகுதிப் பொருட்களுடன் ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தில்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணெயின் அடிப்படை, ஒரு மென்மையான மசாஜை அனுமதித்து முக தசைகளை உறுதி செய்யவும், அதை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளவும், உதவுகிறது, இதன் விளைவாக, இந்த மூலிகை, மருந்து எண்ணெயின் வழக்கமான பயன்பாடு, ஒரு வயதான எதிர்ப்பு (Anti Ageing) விளைவைத் தருவதுடன்  பார்ப்பதற்கு உங்கள் சருமத்தை இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கிறது.

 

கரு வளையங்களை குறைக்கிறது

மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற குங்குமாதி தைல உட்பொருட்கள், சரும நிறத்தை வெளிர வைக்கும் திறன் கொண்டவை. இத்துடன், சரும மாசுக்களை நீக்கும் திறனும் சேர்ந்து, உங்கள் கண்களின் கீழ் வெளிர் நிறமாக்கும் பண்பைக் கொடுக்கிறது. அதனால் குங்குமாதி தைலத்தின் வழக்கமான பயன்பாடு, உங்கள் கண்களின் கீழேயுள்ள கருவளையங்களைப் போக்க உதவுகிறது.

 

குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்துவது எப்படி?

இந்த எண்ணையை உபயோகிக்க, ஒரு சில துளிகளை கையில் எடுத்துக் கொண்டு அதை முகத்தின் மீது சரிசமமாகத் தடவவும். முமு முகத்திற்கும் மென்மையான மசாஜ் அளிக்க உங்கள் விரல்களைப் பயன்படுத்தவும். உங்க்ளுக்குப் பரு இருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாகத் தடவவும், மிகத் தீவிரமாகத் தேய்க்க வேண்டாம். இருபது நிமிடத்திற்கு அந்த எண்ணையை அப்படியே விட்டு விட்டுப் பின்னர் வெதுவெதுப்பான் நீரில் முகத்தைக் கழுவுவம். இந்த சிகிச்சை ஒரு நாளைக்கு மூன்றுமுறை ஒரு வாரத்திற்குத் தொடரவும்.  பின்பு அதை தினம் ஒரு முறையாகக் குறைத்துக் கொள்ளலாம்.

 

குங்குமாதி தைலத்தின் நல்ல மற்றும் பக்க விளைவுகள்

குங்குமாதி தைலம் முக சருமத்திற்கு பல நன்மைகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது மற்றும் இயற்கையில் மூலிகையாக இருப்பதால், அசம்பாவிதம் விளைவுகள் ஏற்படுத்தும் எந்த ஆபத்தும் இல்லை. எனினும் இதனால் ஒரு அனுகூலமற்ற நிலை உள்ளது, அது எண்ணை சருமம் உள்ளவர்களுக்கு மட்டும். உங்களுக்கு எண்ணை சருமம் இருந்தால், இந்த தைலம் அதை மேலும் மோசமாக்கி, எண்ணை சருமத்துடன் தொடர்புடைய பொதுவான பிரச்சனைகளுக்கு வழி செய்கிறது. எனவே எண்ணெய் சருமமுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் சிறிய அளவில், குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தவும், மற்றும் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

 

குங்குமாதி தைலம் தேவைக்கு

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147