தயிர் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

தயிர் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு

சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறுகளைப் போல உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌ கொ‌ண்டு‌ள்ளது.
 
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கிற்கு

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. அ‌பெண்டிக்ஸ் ஐடிஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும்.
 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே 

தயிர் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் ரத்தக்குழாயில் அடைப்பு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
 
மலக்குடல் எரிச்சலுக்கு

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
 
தோல் நோய்களுக்கு மோர் கட்டு

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌ பா‌தி‌க்கப்பட்ட இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.