தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் ?

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் ?

கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள் போன்றவை அடங்கியுள்ளது.

இதைபோல கேரட் ஜூஸை தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும் ஏற்படும்.

அந்த வகையில் கேரட் ஜூஸை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் காலையில் கேரட் ஜூஸைக் கொடுத்து வாருங்கள்.

கேரட் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிவது குறைந்து, இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.

அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

கேரட்டில் பொட்டாசியத்துடன், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்றவையும் வளமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும்.

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.
கேரட் ஜூஸை அன்றாடம் குடித்து வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வரும் அபாயம் குறையும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், தினமும் காலையில் கேரட் ஜூஸில் பசலைக்கீரை ஜூஸை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிட்ன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.
தினமும் கேரட் ஜூஸை குடிப்பதால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகி, அவற்றின் செயல்பாடு வேகப்படுத்தப்படும்.

கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், உடலில் இரத்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு இது நல்ல தீர்வை வழங்கும்.
புகைப்பிடிப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருதன் மூலம், சிகரெட்டினால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.