நினைவாற்றல் பெருக... சரஸ்வதி....
நினைவாற்றல் பெருக... சரஸ்வதி....
திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி செய்து, அரை ஸ்பூன் எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.
வல்லாரை இலைப் பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், மாலையிலும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும்.
அமுக்கிராங் கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் அதிகரிக்கும்.
வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலைனு சாப்பிட்டு வந்தால்... நினைவாற்றல் கூடும்.
இதையெல்லாம் குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் சில நாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.
சரஸ்வதி மூலிகை கலவை
வல்லாரைப் பொடி 200 மி.கி. அளவோடு, வசம்பு 200 மி.கி. (பெயர் சொல்லாதது), வெந்தயப் பொடி-500mg, அரிசித் திப்பிலி-500mg, மஞ்சள் தூள்-500m (கொம்பு மஞ்சள்) சேர்த்து சம அளவு எடுத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும். நல்ல நினைவாற்றல் வளரும், மூளைத்திறன் அதிகரிக்கும். மூளை நரம்பு பிரச்சினைகளும் சரியாகும்.