ரோஜா ரோஜா...
ரோஜாப் பூவில் உள்ள மருத்துவ குணங்களும் மற்றும் சில நோய்களுக்கான தீர்வுகளும்...
Anti Ageing
ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி'யின் முக்கியத்துவம் என்னவெனில், இது சருமத்தில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.
கர்ப்பிணிகளின் மலச்சிக்கலுக்கு மாமருந்து
ரோஜாப் பூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர சிறுநீரகம் மற்றும் இதயம் பலமாகும். மலச்சிக்கல் தீரும்.
வாய் துர்நாற்றம் நீங்க
வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து கூட பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
சீதபேதி குணமாக
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே சாப்பிட்டு வர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும். ரோஜாப் பூவை கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். மேலும் ரணங்களை கழுவ, அவை ஆறும்.
நீர்க்கட்டிற்கு ரோஜாப்பூ சூரணம்
ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.
வாய்ப்புண்கள் குணமாக
ரோஜாப் பூ கஷாயம் பால், சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும். ரோஜாப் பூ இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
நீரிழிவு நோய்க்கு மருந்து
சர்க்கரைநோய் என்கிற நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்கள், ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி, தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும். சர்க்கரைநோய் குணமாகிவிடும்.
முகப்பருக்கள் இல்லாமல் செய்யும்
ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்சனைக்கு ஓர் சிறந்த தீர்வினை காணலாம்.