குங்குலியம் (நாகலிங்க மரம்) மருத்துவ பயன்கள்:

குங்குலியம் (நாகலிங்க மரம்) மருத்துவ பயன்கள்:

ஷோரா ரோபஸ்டா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த குங்குலியம் மரம் பற்றி கேள்வி பட்டிருக்கீறீர்களா? இதில் நிறைய மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளன. இந்த மரம் பொதுவாக இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.

இதை நன்மைகளின் இருப்பிடம் என்றே கூறலாம். இதன் இலைகள், எண்ணெய் ஏன் தண்டு கூட நமக்கு நிறைய விதங்களில் பலனளிக்கிறது. அதனால் தான் இதை ஆண்டு ஆண்டு காலமாக மருத்துவ துறையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குங்குலியம் மரத்தின் நன்மைகள் பற்றி தற்போது காணலாம்.

கிருமிகளை அழிக்கிறது

இந்த குங்குலியம் மரம் நமது உடலில் உள்ள கிருமிகளை, பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது. எனவே இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்க கூடியது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

தொற்றுக்கு சிகிச்சை

இது நமது உடலில் ஏற்படும் தொற்று நோய்க்கு தீர்வளிக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் தொற்றக் கூடிய நோய்களை தடுக்கிறது. தொற்று நோய்க் கிருமி களுக்கு எதிராக செயல்பட்டு சீக்கிரம் தொற்றை போக்குகிறது.

காயங்களை ஆற்றுகிறது

உடம்பில் ஏற்படும் காயங்களை எளிதாக குணமாக்குகிறது. எனவே உடம்பில் சிறிய வெட்டுகாயங்கள், அடி பட்டால் கூட சீக்கிரம் ஆறி விடும். எனவே அடிபட்ட இடங்களிலும் இந்த குங்குலியத்தை பயன்படுத்தி வரலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இந்த குங்குலியம் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு குங்குலியம் சிறந்த நன்மை அளிக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் உடம்பில் எந்த நோயும் அண்டாது.

ஜீரண சீரண சக்தியை அதிகரிக்கிறது

இது ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஜீரண பிரச்சினைகளை சரி செய்து குடலை ஆரோக்கியமாக வைக்கும்.

காது தொற்று

நமக்கு ஏற்படும் காது தொற்றிற்கு கூட இது சிறந்த தீர்வளிக்கிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணங்கள் போன்றவை காது ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. எனவே உங்களுக்கு காது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் இந்த குங்குலியத்தை பயன்படுத்தி வாருங்கள் சீக்கிரம் சரியாகி விடும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உடம்பின் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு உதவுகிறது. நமது உடல் உள்ளுறுப்புகள் சிறந்த விதத்தில் செயல்பட  துணை புரிகிறது.

அரிப்பை குணப்படுத்துகிறது

உடம்பில் ஏற்படும் அரிப்பிற்கு சிறந்த தீர்வளிக்கிறது. சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மையாக்குகிறது. எனவே அரிப்பு, சரும பிரச்சினைகள் எல்லாம் மறைந்து விடும்.

சருமத்தை புதுப்பிக்கிறது

குங்குலியத்திற்கு இயற்கையாகவே சருமத்தை புதுப்பிக்கும் குணம் இருக்கும். சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. இதில் போதுமான விட்டமின்கள், தாதுக்கள் இருப்பதால் இயற்கையாகவே சருமத்திற்கு நல்ல போஷாக்கை தருகிறது. எனவே உங்கள் சருமத்தை இயற்கையாகவே அழகுபடுத்த விரும்பினால் அதற்கு குங்குலியம் போதுமானது.

வலியை குறைக்கிறது

உங்கள் உடம்பில் எதாவது வலி ஏற்பட்டால் கூட அதற்கும் இந்த குங்குலியம் பயன்படுகிறது. இது ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். வலியை குறைத்து சீக்கிரமாக நிவாரணம் அளிக்கிறது.

மெட்டாபாலிசத்தை அதிகரித்தல்

இந்த குங்குலியம் உங்கள் உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடல் மெட்டபாலிசம் சரியாக இருந்தாலே போதும் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதன் மூலம் நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜிட்டிக் ஆக செயல்பட முடியும்.

வியர்வையை தடுத்தல்

உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் அதை தடுக்க இந்த குங்குலியத்தை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கை வியர்வை தடுப்பானாகவும் செயல்படுகிறது.

வயிற்றுப் போக்கை தடுக்கிறது

இந்த குங்குலியம் வயிற்றுப் போக்கை எதிர்த்து செயல்படுவதோடு அதை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

காதுகேளாத பிரச்சினையை சரி செய்கிறது

சில பேருக்கு சில சமயங்களில் காது சரியாக கேட்காமல் இரைச்சலுடன் இருக்கும். அதற்கு குங்குலியம் ஒரு சிறந்த மூலிகை மருந்து.

உடலின் கெட்ட துர்நாற்றத்தை தடுக்கிறது

இது இயற்கையாகவே கெட்ட துர்நாற்றத்தை விரட்ட பயன்படுகிறது. எனவே உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் போன்றவற்றை போக்கி உடம்பை நறுமணத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இப்படி ஏகப்பட்ட நன்மைகளை தரும் குங்குலியத்தை வாங்கி நாமும் பயன் பெறலாமே.