சருமத்தை அழகாக்கும் மூலிகை குளியல் பொடி.:

சருமத்தை அழகாக்கும் மூலிகை குளியல் பொடி.:

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான இரசாயனக் கலவைகளை முகத்திற்கு பூசுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. 

* அதே போல் பலரும் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை பராமரிக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பல கம்பெனிகளும் பணம் பறிக்க பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

* மேலும் இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுமையான பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை மற்றும் அழகைக் கெடுத்துக் கொண்டவர்கள் தான் ஏராளம்.

* முகத்தையும், சருமத்தையும் பேணிப் பாதுகாக்க இயற்கையான மூலிகைகள் நம்மிடையே நிறைந்து உள்ளது. இப்போது இந்த மூலிகைகளை பயன்படுத்தி எப்படி அழகான முகத்தைப் பெறலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

மூலிகை குளியல் பொடி செய்ய தேவையான பொருட்கள்...

உலர்ந்த மகிழம் பூ பொடி - 400 கிராம்,
கிச்சிலி கிழங்கு பொடி - 200 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் பொடி - 200 கிராம்
கோரைக் கிழங்கு பொடி - 200 கிராம்,
உலர்ந்த சந்தனத் தூள் - 300 கிராம்,

செய்முறை.:

* முதலில் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும், தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் ஊற வைத்து குழைத்து முகத்தில் தடவவும். 

* பின்னர் அரை மணி நேரம் முகத்தில் ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும் மற்றும் முகம் மென்மையாகும்.