குப்பை உணவுகள்...

பிஸ்கெட்,  பிரெட், சாக்லேட் உணவுகளும் குழந்தைகளும்...

குழந்தைகள் உள்ள வீடுகளில் பிஸ்கெட் போன்ற உணவுகளை எப்படியும் வாங்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு அடிக்கடி பசி எடுக்கும்। அதற்கு எளிய வழி இந்த பிஸ்கெட் உணவுகள்.

ஆனால் இவை குழந்தைகளின் உடலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று நாம் உணரவில்லை. இந்த தயார் நிலை உணவுகளில் பல விதமான உடலுக்கு ஒவ்வாத பொருட்களை சேர்த்து தான் பதப்படுத்துகிறார்கள். இதில் சேர்ந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட மைதா, எண்ணெய்கள், கொழுப்பு மற்றும் வெள்ளை சீனி போன்ற கெமிக்கல் கலந்த பொருட்கள் முதலில் தாக்குவது குழந்தைகளின் நினைவுத் திறனை தான்.

பிஸ்கெட் மற்றும் பொதி செய்யப்பட்ட பால் போன்றவற்றை உண்ணும் குழந்தைகள் வீட்டு உணவில் என்றும் நாட்டம் கொள்வதில்லை. விளைவு உடல் பருமன், மந்த நிலை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்வர்.

நோய்வாய்ப்பட்டதும் மீண்டும் மருந்துகள் என்ற ரசாயனம் உடலில் வந்து சேரும். இப்படி எல்லா ரசாயனங்களும் அந்த பிஞ்சு உடலை எவ்வளவு பாதிக்கும் என்று பெற்றோர்கள் கொஞ்சம் நினைத்து பொறுப்போடு செயலாற்றுவது மிக முக்கியமானதாக இருக்கின்றது.

தயவு செய்து பிஸ்கெட், பிரெட், சாக்கலேட், கடையில் விற்கும் பழச்சாறுகள் உட்பட அனைத்து கடை உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். குழந்தை அழுகிறதே என்று பிஸ்கெட் போன்றவற்றை கொடுத்து பழக்குவது விஷம் கொடுப்பதற்கு ஒப்பானது.

பசிக்கும் பொழுது வீட்டில் இருக்கும் சோறு, இட்லி போன்ற உணவுகளையோ அல்லது வீட்டிலேயே செய்த தின்பண்டங்களையோ அல்லது பழங்களையோ உண்ண கொடுத்து பழக்க வேண்டும்.

அவித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு+ தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சிய பால் போன்றவை சிறந்த இடை உணவாகும்.

தேங்காய் பால் தாய் பாலுக்கு நிகரானது. அதனை நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தக் கொடுங்கள்.
சிவப்பரிசி கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, தானியங்கள், பழங்கள், வற்றாளை கிழங்கு போன்றவை மிக ஆரோக்கியத்தை தரும்.

தீங்கான கலப்படங்களை கொண்ட சூரியகாந்தி, Palm oil போன்ற தாவர எண்ணெய்களை பாவிக்காது கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களை உபயோகப் படுத்துங்கள்....

வெள்ளை சீனி, தூள் உப்பை தவிர்த்து நாட்டு சர்க்கரை, கல் உப்பு உபயோகப் படுத்துங்கள்.

இதன் பொழுது குழந்தையின் உள, உடல் வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு, எதிர்ப்புசக்தி மேம்படும். சாதாரண காய்ச்சல், சளி வந்தாலும் கை மருந்துகளே போதுமானதாக இருக்கும்
.