மூட்டு இணைப்புகள் மற்றும் தண்டுவட வலி மற்றும் வீக்கம் நீக்கும் கவிழ்தும்பை...

மூட்டு இணைப்புகள் மற்றும் தண்டுவட வலி மற்றும் வீக்கம் நீக்கும் கவிழ்தும்பை...

தண்டுவட வலி, மூட்டு இணைப்பு வலி...

கவிழ்தும்பை முழு செடியாக எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, வெட்டிய சிறு துண்டுகளை  25 கிராம் அளவில்  500 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, 4ல் ஒரு பங்காக வற்றிய பின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்புகள் மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். 

மூச்சுப் பிடிப்பிற்கு

கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். 

சிறந்த வலி நிவாரணி (வெளிப்பூச்சு)

கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர் விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். 

தசை எலும்பு வலிகளுக்கு (உள் மருந்தாக)

வீக்கம் வற்றும். நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை.