மலச்சிக்கல் தீர 50 எளிய வழிகள்...

4448 நோய்க்கும் ஆதி மூல காரணம் மலச்சிக்கலே…

மலச்சிக்கல் தீர 50 எளிய_வழிகள்…

திரிபலா சூரணம்

1- கடுக்காய் - விதை நீக்கி தோல் பகுதி மட்டும்.

2 -நெல்லிக்காய் -விதை நீக்கி தோல் பகுதி மட்டும்.

3 -தான்றிக்காய் - விதை நீக்கி தோல்பகுதி மட்டும்.

இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

இதுவே "திரிபலா சூரணம்" எனப்படும்.இதனை இரவு சாப்பிட்டு முடித்து குறைந்தது 3 மணி நேரம் கழித்து  அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும். வாத, பித்த, கப நாடிகள் 
சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும், இரத்தம் விருத்தியாகும்.

கடுக்காய் சூரணம்...

தேவையான பொருட்கள்:

கடுக்காய் - 35 கி.கிராம் 

சிவதை - 35 கிராம் 

இஞ்சி - 35 கிராம் 

மிளகு - 35 கிராம் 

ஓமம் - 35 கிராம் 

வாய்விளங்கம் - 35 கிராம் 

திப்பிலி - 35 கிராம் 

பசுவின் நெய் - 1.6 லி 

தேன் - 1 லி 

செய்முறை

கடுக்காயை இடித்து எட்டு பங்கு நீர் கலந்து பின் 1 பங்காக வற்ற வைத்து சர்க்கரையுடன் சேர்த்து பாகுபதத்தில் 1 - 7 பொருட்களை பொடித்து சேர்த்து நெய்விட்டு கிண்டி மெழுகு பதத்தில் தேன் விட்டு கலந்து வைக்கவும்.

சாப்பிட வேண்டிய அளவு

2-6 கிராம் சாப்பிட்டு இளம் வெந்நீர் குடிக்கவும். ஒரு நாளைக்கு  இரண்டு வேளை.

தீரும் நோய்கள்

மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய்வு, வயிற்றுப்புண்  ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியமாகும்.

சகல வாயு சூரணம்

தேவையான பொருட்கள்

சுக்கு                 - 50 கிராம்

மிளகு          - 50 கிராம்

திப்பிலி         - 50 கிராம்

ஓமம்           - 50 கிராம்

சீரகம்                - 50 கிராம்

சோம்பு          - 50 கிராம்

இந்துப்பு         - 50 கிராம்

பெருங்காயம்    - 50 கிராம்

கருஞ்சீரகம்      - 50 கிராம்

செய்முறை

 இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக, பிற சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்துக் கொள்ளவும். பின்னர் இவற்றைத் தூளாக்கி இந்துப்பு, பெருங்காயம் இவற்றையும் தூள்செய்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

பயன்கள்

மலசிக்கல்,

குடற் புண்,

அனைத்து வகை வாயுக்கோளாறுகள், 

பசியின்மை, 

செரியாமை 

ஆகியன தீரும். 

மூன்று வேளை உணவுக்குப்பின் 1 டீஸ்பூன் சாப்பிடலாம்…… 

அல்லது……

இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். 

இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உணவுப் பொடியாகும்.

மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

1.. இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன்மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

2.. எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதனுடன் சுடுநீரை ஊற்றி, தேன் கலந்து தினமும் 3 டம்ளர் குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.

3.. கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.

4. கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி,  அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

5.. வெஜிடேபிள் சூப் செய்யும் போது, அதனுடன் இஞ்சியை துருவி அதனுடன் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்

 மலச்சிக்கல் நீக்கும் உணவுகள்

காபி, தேநீர், குளிர்பானங்களை கூடுமானவரை தவிர்த்து விடவும். 

இளநீர், பழச்சாறு அருந்தவும். 

இரவில் இரண்டு பழங்கள் சாப்பிடுவது மிக நல்லது. வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. 

சீஸனல் பழங்களும் உண்ணலாம். 

நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். 

வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், முட்டைகோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், 

கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், பேரீட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள், மிளகு, ஓமம், கொத்தமல்லித்தழை… 

இவையெல்லாம் நார்ச்சத்து நிறைந்தவை. உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்லது.

பாட்டி வைத்தியங்கள்

1.   3 தேக்கரண்டி விளக்கெண்ணையுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்

2.   திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்

3.   கரிசலாங்கண்ணி இலை5,  தினம் காலையில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்

4.   நிலாவாரை சூரணம் 1 தேக்கரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்

5.   மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்

6. கறிவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்திடித்து பொடிசெய்து, அரை தேக்கரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்

7.   சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து, பொடித்து, 2 சிட்டிகை சம அளவு மஞ்சள் தூளுடன், 50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்

8.   தூதுவேளைக் காயை வற்றல் செய்து, இரவில் பொரித்து உண்டுவர மலச்சிக்கல் தீரும்

9.   முடக்கறுத்தான் இலையை இரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். குடல் வாயு கலையும்

10.  வில்வ இலைத்தூள் அரைத் தேக்கரண்டி, வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண், மலச்சிக்கல் குணமாகும்
 

11.  ரோஜா குல்கந்து காலை மாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் வெள்ளைப்படுதல் குணமாகும். தொடர்ந்து சாப்பிட இதயம்,கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்

12.  பாகற்காய் இலை 10-15 அரைத்துச் சாப்பிட பேதியாகி மலக்கட்டு உடையும்
 
13.  ஆடுதீண்டாப்பாளை இலை அல்லது விதைச்சூரணம் அரைதேகரண்டி, வெந்நீர் அல்லது வி.எண்ணையில் கொள்ள பேதியாகி மலக்கட்டு உடையும்
 
14.  காக்கரட்டான்வேர் 10 கிராம், சுக்கு15கிராம், திப்பிலி10கிராம், விளாம்பிசின் 10 கிராம் சேர்த்தரைத்து, குன்றிமணியளவு மாத்திரை செய்து.பெரியவர்களுக்கு1, 
குழந்தைகளுக்கு அரைமாத்திரை வீதம் காலை வெந்நீரில் கொடுக்க பேதியாகும்.

15.  நல்வேளை விதைகளை நெய்யில் வறுத்துப் பொடித்து,குழந்தைகளுக்கு அரை, பெரியவர்களுக்கு 4 கிராம் என்ற அளவில் தினம் இருவேளை 3நாள் கொடுத்து, 4ம் நாள் காலை விளக்கெண்ணெய் அரைதேக்கரண்டி அளவு கொடுக்க பேதியாகும். தட்டைப் புழுக்கள் வெளியாகும்

16.  10கிராம் நுணாவேரை 5ல் 1-பங்காய் காய்ச்சி 100மிலி பருக பேதியாகும்.

17.  கால் சங்கு நீரில் 5 துளி தேன்,
கோரோசனை மாத்திரை1, கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க  
மலச்சிக்கல்  தீரும்

18.  மூலக்குடோரி எண்ணை 10-15மிலி வெதுவெதுப்பான பாலில் இரவில் கொள்ள மலச்சிக்கல் தீரும்

19.  கடுக்காய்தோல் 5கிராம் 3ல்1பங்காய்க் காய்ச்சி தினம் 3 வேளை பருக மலச்சிக்கல் தீரும்.

20.  10கிராம் உலர்ந்த திராட்சையை 
100மிலி வெந்நீரில் ஊறவைத்துப்,
பிசைந்து 15-30 மிலி, இரவில் குழந்தைகளுக்குக் கொடுக்க 
மலச்சிக்கல் தீரும்.

21.  மூக்கிரட்டை இலையை பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். கண் பார்வை தெளிவடையும் .உடல் வனப்பாகும்.

22.  சிவதைவேரைப் பாலில் வேகவைத்து பொடித்து 1கிராம், இரவு வெந்நீரில் கொள்ள வயிற்று வலியின்றி மலம் வெளியாகும்.

23.  திராட்சையை கொட்டை நீக்கி சாறெடுத்து 10மிலியுடன்,தேன் கலந்து சாப்பிட்டுவர இரத்தம் சுத்தமாகும் மலக்கட்டு தீரும்.

24.  பால்பெருக்கி இலையை வதக்கித் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

25.  கொய்யாப்பழத்தை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்.

26.  நிலவாகை சூரணத்தை  5-10 கிராம் இரவில் வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்.

27.  ஆவாரை பஞ்சாங்க சூரணம் 1தேக்கரண்டி வெந்நீரில் கொள்ள அதிதாகம், நாவறட்சி உஷ்ணம்,
அதிமூத்திரம், மலச்சிக்கல் தீரும்.

28.  வெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய்  தடவி ஆசனவாயில் வைக்க மலச்சிக்கல் தீரும்.

29.  சுக்கு வெந்நீரில் 1,2 தேக்கரண்டி விளக்கெண்ணெய்  கலந்து பருக மலச்சிக்கல் தீரும்.

30.  துத்தியிலை, சிறுபயறு, வெங்காயம் சமனாய் எடுத்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.
 
31.  பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல், இரத்தசோகை தீரும்.

32.  வேப்பம்பட்டைச் சூரணம் 10கிராம் பாலில் கொள்ள மூலம், மலக்கட்டு,
குன்மவலி நீங்கும்.

33.  சரக்கொன்றைப் பூவை வதக்கித் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

34.  சரக்கொன்றைப் புளியை சமையல் புளியுடன் கலந்து உணவில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்

35.    புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தர கக்குவான் இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். 

36.   செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

37.   தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்த மலச்சிக்கல் தீரும்.

38.   அரை மூடி எலுமிச்சைப் பழச் சாற்றை, வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒரு சிட்டிகை உப்பை நன்றாக கலந்து காலை எழுந்தவுடன் குடிக்க மலச்சிக்கல் தீரும்.

39. அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

40. ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட மலக்கட்டு தீரும்.

41. அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி தினமும் 2 தேக்கரண்டி  சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.

42. விளக்கெண்ணெயை தினமும் ஆசன வாயில் தடவ மலச்சிக்கல் தீரும்

43. ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

44. இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை பத்து கிராம் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்

45. இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

46. தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் சாறை குடித்து வர, குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் கூட குணமாகும்

47. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு பொடித்து ஒருதேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்

48. பிஞ்சு கடுக்காய் 100 கிராம், சுக்கு100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்கும் பொழுது குடித்து விட்டு படுக்க மலம் இளகும்.

49. செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். 

50. ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

51. அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மலக்கட்டு உடையும்.

மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும். உடலின் உள் சூடும் தணியும்.

மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் தவறான உணவுப் பழக்கமே...

எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.