நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம், எப்படி?

நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம் எப்படி?...

"நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம்" என்பது பழமொழி. நம்மில் நிறைய பேர் சாப்பிடும்போது அவசரமாகவும், அரைகுறையாகவும் மென்று விழுங்குவதால், உணவின் முழு பயனையும் உடல் அடைய முடியாமல் போகிறது. நாம் சாப்பிடும் ஆகாரம் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து வயிற்றை அடைய வேண்டும். 'உமிழ்நீர்' எனப்படும் எச்சில் உணவை ஜீரணிப்பதில் 25 சதவீத பங்கு வகிக்கிறது. இன்னொரு 25 சதவீதம் நாம் உணவை மென்று திண்பதால் ஏற்படும். ஆக 50 சதவீத ஜீரணம் நம் உணவு உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடையும் முன்பே ஆக வேண்டும். மீதமுள்ள 50 சதவீதம் இரைப்பையிலிருந்து சிறுகுடல் வழியாக பெருங்குடலை அடையும் வரை நடக்கிறது,

நம்ம வீட்டில் உள்ள பெரியவர்கள்"வாயை மூடிட்டு சாப்பிடு, பேசாம சாப்பிடு" ன்னுல்லாம் சொல்வாங்க. நாம எதோ பேசக்கூடாதுங்கறதுக்காக அப்படி சொல்றாங்கன்னு நினைப்போம். ஆனா வாய் பேசாமல், உதடுகளை நன்றாக மூடி, உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும் என்ற நோக்கில் சொல்லப்பட்ட வார்த்தை அது .

"வாயை மூடி சரி... அது .என்ன உதட்டையும் மூடி?" அப்படின்னு கேட்கிறீர்களா!! உதட்டை மூடி சாப்பிடும்போது தான் அதிக உமிழ்நீர் வாயில் சுரக்கும். உதட்டை பிரித்தபடி சாப்பிட்டாலோ அல்லது வாயை திறந்து மூடியபடி சாப்பிட்டாலோ.. காற்று உட்புகுவதால் உமிழ்நீர் சுரக்காது. கவனித்து பாருங்கள்.

இன்றும் நாம் டிவி பார்த்துக்கொண்டும் அல்லது அலைபேசியில் பேசி கொண்டும், எதையோ துழாவி கொண்டும் சாப்பிடுகிறோம். இளம்வயதில் வேண்டுமானால் உடல் இதற்கெல்லாம் ஈடு கொடுக்கலாம். ஆனால் 40 வயதை கடந்து விட்டால் உடல் நம்முடன் பேச ஆரம்பிக்கும். அப்படி பேச ஆரம்பித்துவிட்டால் அதன் பாஷை உங்களுக்கும் புரியாது.. உங்க டாக்டருக்கும் புரியாது. ஆகவே சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வைத்து நொறுங்க திண்போம்.. நூறாண்டு காலம் ஆரோக்கியமாய் வாழ்வோம்.