கிணற்றடிப் பூண்டு, வெட்டுக்காய பச்சிலை...

மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயால் ஏற்படும் புண்களையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. முயற்சித்து பயனடையுங்கள்!

எந்த ஒரு இரத்த காயம் பட்டாலும் உடனடியாக இந்த இலையை லேசாக அரைத்தோ கசக்கியோ காயத்தின் மேல் வைத்து கட்டி விட்டு, பிறகு அவ்வப்போது அந்த காயத்தில் மேல் போட்ட கட்டின் மீது சாறை மட்டும் விட்டு வர வேண்டும். எந்த அளவிற்கு காயம் பட்டு இருந்தாலும் 2,3 நாட்களில் சுத்தமாக  வடு இல்லாமல் ஆறி விடும்.
TT Injection கூட போட தேவையில்லை...


எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு குழியாகி படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே புரை ஏறி ஆபத்தாகி விடும் என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்க்கரை நோய் பல ஆண்டுகளாக நீரிழிவு நோய். அந்த அம்மையார் கதறிவிட்டார்.

பக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள். என் தந்தை அந்த அம்மையாரின் மகனைக் கூப்பிட்டு விபரம் கேட்டார். அவர் விவரத்தைக் கூறியதும் என் தந்தையுடன் நானும் (எனக்கு 12 வயதிருக்கும் அப்போது.) அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். என் தந்தை அந்த அம்மையாரின் காலைப் பார்த்து விட்டு கவலைப்படாதே உன்னை பழைய ஆள்மாதிரி நடக்க வைக்கிறேன் என்றார்.

எனக்கோ கடும் அதிர்ச்சி அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு, எட்டியே நின்று கொண்டேன். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் மற்றும் நான் உட்பட ஏதோ ஆறுதலாக கூறுகிறார் என்றுதான் நினைத்தோம்.

மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.

அவ்வப்பொழுது சாறை ஊற்றி கட்டை நனைத்துக் கொள்ளச் சொன்னார். காலை, மாலை இதேபோல் செய்தார்.

என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார். இதற்கு பத்துபைசா வாங்கவில்லை என் தந்தை. அது இன்னும் என் நினைவில் உள்ளது.

அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயால் ஏற்படும் புண்களையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. முயற்சித்து பயனடையுங்கள்.