தேங்காய்ப்பாலின் மகிமைகள்:

தேங்காய்ப்பாலின் மகிமைகள்:

எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்...

தேங்காயை உணவில் நேரடியாக பயன்படுத்தாமல் (அதாவது சூடுபடுத்தி சமைக்காமல்), அதைப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.

இது உடல் சூட்டைக் குறைத்து ஒல்லியாவர்களைக் கூட சற்று பூசினாற் போல பளபளப்பாக மாற்றுவது இதன் தனித்தன்மை, வாய்ப்புண், வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் தேங்காய்ப்பால் பயன்படுகிறது.

பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின்-சி, இ, பி1,பி3,பி5,பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது ஒரு அற்புத உணவு.

இரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். வயிற்றினுள் பெருங்குடலின் வறட்சித் தன்மையைப் போக்கி மலச்சிக்கலை நீக்கும்.

ஒரு கப் தேங்காய்ப் பாலில் நமக்குத் தினமும் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்து விடுகிறது.

சரும நோய்களைத் தீர்க்கும். வறண்ட சருமத்தை வளமாக்கும்.

இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
இரத்த சோகை போன்ற நோய்களையும் தடுத்து விடும். பசியை அடக்கும் ஆற்றல் இருப்பதால், இதைப் பருகி, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம், முடக்கு வாதம் போன்றவற்றைத் தடுக்கிறது.
பொட்டாசியம் இருப்பதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.

வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி,இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.

எலும்புகளை வலிமையாக்கும்:
இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். பாஸ்பரஸ் இருப்பதால் மென்மையான எலும்புகள் கொண்ட முதியவர்கள், குழந்தைகளுக்கு இதை தடவி சூரிய குளியல் செய்யச் செய்யலாம்.

எலும்பை கடினமாக்கி வலிமையைத் தரும். எலும்புபுரை, எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.

உடலில் உள்ள அமிலத்தன்மை நீக்கும் இந்த சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பால் உபயோகித்து பல நன்மைகள் அடைவோம்.