சூதகக் கட்டி, சூதகச் சன்னி என்றால் என்ன?

சூதகக் கட்டி, சூதகச் சன்னி
என்றால் என்ன?

*28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது (மாதவிலக்கு) அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும்.

இந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடும். இதனை சித்த மருத்துவத்தில்…… 

*உதிரக்கட்டி, 

*சுரோணிதக்கட்டி, 

*கற்பசூலை, 

*இரத்தக்கட்டி, 

*கர்ப்பசூலை, 

*சூதகக்கட்டி, 

*கல்சூலை, 

*சூல்மகோதரம் 

என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. 

கர்ப்பமுற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா அறிகுறிகளும் தோன்றும்.

அதாவது……

*பசிமந்தம் ஏற்படும். 

*தேகம் வெளுக்கும். 

*ஸ்தனத்தில் (பெண் உறுப்பு) கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். 

*ஆண், பெண் சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். 

*மார்பு துடிக்கும். 

*ஆயாசமாக இருக்கும்

*வாந்தி உண்டாகும். 

*சிலருக்கு மார்பகங்களில் பால் சுரக்கும். 

*வயிறு கர்ப்பமாக உள்ள பெண்கள் போல பெருத்துக் கொண்டே வரும்.

*கருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். 

*இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள். 

*சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். 

சூதகச் சன்னி என்றால் என்ன?

*அளவுக்கு மீறிய நரம்பு தளர்ச்சி , 

*மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், 

*அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், 

*இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், 

*பெரும்பாடு, 

*சூதகக்கட்டு, 

*நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, 

*பிரமேகம் 

இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், 

*அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், 

*நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும்.

இத்தகைய சூதகச்சன்னி 
ஏற்பட்டால் என்ன நடக்கும்…!

*வலிப்பு உண்டாகும். 

*அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். 
அல்லது அழுவார்கள். 

*நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். 

*கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். 

*சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். 

*சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.

*சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். 

*இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், 

*நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும் இருக்கும்.

*இடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். 

*இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். 

*புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். 

*கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். 

*சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். 

சன்னி தெளிந்து விடும். 

சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ……… 

பேய், பிசாசு

பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்கள்.