உணவு தொழிற்சாலைகளில் உணவு தயாரிப்பு இரகசியம்...

இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அந்த உணவுகளை வாங்கவே மாட்டீங்க...

உணவுத் தொழிற்சாலைகள் பல இரகசியங்களை வைத்திருக்கிறது. அவர்களது தயாரிப்புக்களை சந்தோஷமாக சுவைக்க நினைத்தால், குறிப்பிட்ட சில உணவுகளை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. 

புற்றுநோய், சர்க்கரை நோய் அபாயம்

ஏனெனில், எப்படியும் நீங்கள் ஒவ்வொருவரும் உணவுத் தொழிற்சாலைக்கு போகப் போவதில்லை, அங்கு சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் செயற்கை சுவையூட்டிகள் இருக்கிறதா, இல்லையா என்பதையும் காணப் போவதில்லை.
அதுமட்டுமின்றி பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், விலங்குகளின் முடிகள் போன்றவையும் சேர்ந்துள்ளதா என்பதையும் காணப் போவதில்லை. ஆகவே சுவையாக உள்ளது என்று வாங்கி சாப்பிடும் நாம், அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதிலா ஆர்வத்தைக் காட்டப் போகிறோம்.

வணிக உணவின் சுவையின் மர்மமான கலப்படங்கள்

ஆனால் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தால், கடைகளில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களைப் பற்றிய ரகசியங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவும் வணிக உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சில வகை உணவு தொழிற்சாலைகளின் ரகசியங்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.

இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போவது சில முக்கியமான உணவுப் பொருட்களின் தயாரிப்பைக் குறித்து தான். அதைப் படித்தால், இனிமேல் நீங்கள் அந்த உணவுப் பொருட்களை வாங்கவே மாட்டீர்கள்.

சீஸ்

விலை அதிகமான ஓர் உணவுப் பொருள் தான் சீஸ். இதில் ரெனெட் என்னும் பொருள் உள்ளது. பொதுவாக ரெனெட் கன்றுக் குட்டியின் வயிற்றில் இருக்கும் பொருளாகும். இந்த பொருளை கன்றுக்குட்டியை கொன்று எடுக்கிறார்கள். ரெனெட் என்னும் நொதிப்பொருள் தான் சீஸ் செயல்முறைக்கு அத்தியாவசியமானது. கன்றின் இறைச்சியை சாப்பிட விரும்பாத நீங்கள், எப்படி சீஸ் மட்டும் இனிமேல் சாப்பிடுவீர்கள்.
ஆனால் இன்று பெரும்பாலான சீஸ் கம்பெனிகள் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ரெனெட்டைப் பயன்படுத்துகின்றன. இதனால் கன்றுக்குட்டிகள் கொல்லப்படாமல், மரபணு மாற்றப்பட்ட உணவுகளாக விற்கப்படுகின்றன.

சிக்கன் நகட்

சிக்கன் நகட் என்பது சிக்கனின் மார்பு பகுதியில் உள்ள தசைகளை அரைத்து தயாரிக்கப்பட வேண்டிய உணவுப் பொருளாகும். ஆனால் கடைகளில் விற்கப்படும் சிக்கன் நகட்டில் இருப்பது பாதி சிக்கன் தான். மீதி பாதியில் சிக்கனின் தோல், இரத்த நாளங்கள், எலும்பு, கொழுப்பு, இணைப்புத்திசுக்கள் போன்றவைகளாகும். அதோடு அத்துடன் சிறிது ஸ்டார்ச், சர்க்கரை, உப்பு மற்றும் வேறு சில பொருட்களும் சேர்க்கப்படுகிறது.

சிட்ரஸ் சோடா/லைம் சோடா

சிட்ரஸ் சோடா புளிப்புச் சுவையுடன் நன்கு சுவையாக இருக்கும். உண்மையில் இந்த வகை சோடாவில் எந்த ஒரு பழமும் சேர்க்கப்படவில்லை. மாறாக, அதில் செயற்கையான சிட்ரஸ் ப்ளேவருடன், புரோமினேட்டட் வெஜிடேபிள் ஆயில் (BVO) சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக BVO என்னும் பொருளானது உணவு அல்லாத தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மற்றும் நெருப்பைத் தடுக்கும் ஒரு பொருளாகும்.

ஐரோப்பாவில் BVO தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1970-இல் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பான அளவிலான நுகர்வு இருப்பதாக முடிவு செய்தது. ஆனால் இப்பிரச்சனை ஒருபோதும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை.

காபி க்ரீமர்கள்

காபி அல்லது டீயில் சிறிது க்ரீம் சேர்த்தால், அது அவற்றை மென்மையாக்குவதோடு, கசப்புத்தன்மையையும் குறைக்கும். ஆனால் காபி, டீயில் உண்மையான பால் அல்லது க்ரீம் சேர்க்காவிட்டால், அதில் வேறு என்ன கலக்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உண்மையில் காபி க்ரீம்களானது செல்லுலோஸ் ஜெல் அல்லது செல்லுலோஸ் கோந்து, மரக்கூழ் அல்லது பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் தோற்றமளிப்பான்களைக் கொண்டிருக்கின்றன. கராஜீனன், இந்த க்ரீமை அடர்த்தியாக்குகின்றன. இந்த கராஜீனன், அழற்சி கோளாறுகள் அல்லது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கக் கூடியவையாகும். அதிலும் பவுடர் க்ரீமர்கள் மிகவும் மோசமானது. இதில் சேர்க்கப்படும் பல கெமிக்கல்கள் எரியக்கூடியவை.

கேன் மஸ்ரூம்

கேன் மஸ்ரூம்களை அதிகம் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு சொல்ல வேண்டிய ஒரு உண்மை உள்ளது. அது என்னவென்றால் 
கேன் மஸ்ரூம்களின் ஒவ்வொரு கேன்களிலும் 20 புழுக்கள் இருக்க நமது அரசு அனுமதி அளித்துள்ளது. ஆம், வெறும் 20 புழுக்கள் இருக்கலாம் என்று அனுமதித்து தான் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. என்ன நீங்க, புழு நிறைந்த கேன் மஸ்ரூம் சாப்பிட ரெடியா?

பீர்

சில சமயங்களில் உணவுகளில் சேர்க்கப்படும் உட்பொருட்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அதில் பல ஆண்கள் விரும்பி சாப்பிடும் பீரிலும் அருவெறுக்கத்தக்க பொருள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியுமா? அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அது வேறொன்றும் இல்லை, மீன்பசைக்கூழ். இது பீரை தெளிவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
மீன்பசைக்கூழ் மீனில் இருந்து வந்த பொருள் தானே என்று சந்தோஷப்படலாம். ஆனால் அது கருவாட்டின் சிறுநீர்ப்பையில் இருந்து பெறக்கூடிய பொருளாகும். இனிமேல் பீர் குடிப்பீர்களா?

ஐஸ் க்ரீம்

பார்த்ததுமே அனைவரையும் சாப்பிடத் தூண்டும் குளிர்ச்சியான ஒரு பொருள் தான் ஐஸ் க்ரீம். இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருள். ஐஸ் க்ரீம் பால், க்ரீம், சர்க்கரை, முட்டை மற்றும் ப்ளேவரிங் கொண்டு எளிதில் தயாரிக்கக்கூடியது.
ஆனால் கடைகளில் விற்கப்படும் ஐஸ் க்ரீம்களில் காஸ்டோரியம் என்னும் நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி கலந்துள்ளது என்பது தெரியுமா? அதே சமயம் இந்த மூலப்பொருளை அறுவடை செய்வது மிகவும் கடினம் என்பதால் இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இருந்தாலும், இனிமேல் ஐஸ் க்ரீம் சாப்பிடும் முன் அதன் லேபிளை தவறாமல் படிப்பதோடு, சாப்பிடவும் யோசிப்பீர்கள் தானே!