பலா பழத்தின் மருத்துவப் பயன்கள்

பலா பழத்தின் மருத்துவப் பயன்கள்...

முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

மருத்துவப் பயன்கள்.:
பலாப்பழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், இரத்தத்தை விருத்தி செய்யும்.

கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்கு உள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு:
 பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.

பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும்.

பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

பலாவிலிருந்து தயாரித்த உணவுகளை அல்லது பலாச்சுளையினை ஒரு கிலோ சாப்பிட்டால்கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இருப்பினும் பழுத்த பலாச்சுளை மலச்சிக்கலை குணப்படுத்தும் என்பதால் பழக்கமில்லாமல் அதிகம் சாப்பிடும்போது வழக்கத்திற்கு மாறாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு உண்டாகும் வயிற்றுப் போக்கிற்கு ஒரே ஒரு பலாக் கொட்டையினை அடுப்பில் சுட்டு சாப்பிட வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சிறுநீரக குழாய் தொற்றுநோய்:
பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.

பலாவிலுள்ள தாவர உயிர்ச்சத்துகள்:
புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும், அணுக்களுக்கு உயிரூட்டம் கொடுத்து என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.

பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.

வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.

பலாவில் உள்ள சத்துக்கள்
பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.

நரம்புகளை உறுதியாக்கும்:
வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும். வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.