க்ரீன் டீ நன்மைகள்...

``பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, சி.டி.சி. டீ (சிஜிசிஜி) என்று இரண்டு வகை உண்டு. சி.டி.சி.டீ'தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால், சீனமக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்துவருவது க்ரீன் டீ. இந்த க்ரீன் டீ இதன் மருத்துவ குணத்தால் இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது''. 


சி.டி.சி.டீ.

கட் டர்ன் அண்ட் க்ரஷ் டீ (CUT TURN AND CRUSH TEA) என்னும் பதப்படுத்தப்பட்ட, நாம் அன்றாடம் குடித்துப் பழகிவந்த டீ-தான் இந்த சி.டி.சி.டீ.

க்ரீன் டீ

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப்படுத்தப்படும் தேயிலைதான் க்ரீன் டீ என்பது.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கோலிபெனல்ஸ் (Catechin Colyphenois)-தான் க்ரீன் டீயின் மெயின் விஷயம்... அதாவது பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் மிகச்சிறந்த நோயெதிர்ப்புச் சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

கேன்சருக்கு மிக நல்லது!

கேன்ஸர்: பொதுவாக கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேஷன் கதிர்வீச்சுதான் மெயின். இந்த ரேடியேஷன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால், இந்த க்ரீன்-டீ கேன்சர் செல்களை மட்டும் கொல்கிறது. காரணம் அதன் கேட்சின் கோலிபெனல்ஸ்தான் என்றாலும் கேன்சருக்கான `உடனடி ட்ரீட்மென்டாக' மருத்துவர்கள் க்ரீன் டீயை பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடுங்காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்!

காலம் காலமாக சீன மக்கள் விரும்பிக் குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ! சீனர்கள், பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். குட்டிகுட்டியாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவுமுறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்களுக்கு தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கமும் இருப்பதால், இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை இவர்கள் உடம்பில் அறவே சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்தநாளங்களின் அடைப்பு நீக்கும்!

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமூசா, பீட்ஸா, வடை, சிக்கன் 65 போன்ற ஜங்க் ஃபுட், ஆயில் ஃபுட்களாலும், ஸ்வீட்ஸ்களாலும் இப்படி தவறான உணவுப்பழக்க முறையால் உண்டாகும் கெட்ட கொழுப்பினால் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படும். இது ஹார்ட் அட்டாக் வரைகூட போகும். இந்த ரத்தநாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்குக் கொண்டுவரும் பணியைச் செய்கிறது இந்த க்ரீன் டீ.

மூட்டுப்பிரச்னைகள், ஹை ப்ளட்ப்ரஷர், இதய நோய்கள்

தொடர்ந்து க்ரீன் டீ பருகிவந்தால் மேற்கண்ட அத்தனை பிரச்னைகளும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகிறது.
சளி, ஜுரம் வராது

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்னசின்ன தொற்றுக்கிருமிகளால் நமக்கு சளி, ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களை தோற்றுவிக்கும் கிருமிகளைக்கூட கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்புச்சக்தி.

உடல் நடுக்கம்

சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துபோவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது இந்த க்ரீன் டீ.

எடை குறைக்க விரும்புகிறீர்களா?

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxidation thermogeniuesis எனப்படும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப்படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் க்ரீன் டீயை அடிக்கடி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தின்படி அவர்களின் உடல் எடை அதிகமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அப்படி குண்டாக இல்லாததற்கு இந்த க்ரீன் டீயே காரணம்''.

சீன மக்களிடம் இல்லவே இல்லை!

நாம் அன்றாடம் `டீ' என்ற பெயரில் பருகும் சி.டி.சி.டீ. பழக்கம் சீன மக்களிடம் இல்லவே இல்லை! அதிலும் குறிப்பாக பால் ஊற்றி டீ சாப்பிடும் பழக்கம் சுத்தமாக இல்லை.

டயபடீஸ் இருக்கா உங்களுக்கு?

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீயும் பருகி வந்தால் சுகர் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும், செரிமானத்துக்குப் பின் குளுகோஸாக மாறி ரத்தத்தில் சேராதபடி க்ரீன் டீ தடுக்கிறது.

க்ரீன் டீ'க்கு நிகரில்லை

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ போன்ற ஜீரணசக்திப் பொருட்களை சேர்த்திருந்தாலும் கூட உணவுக்குப்பின் க்ரீன் டீ பருகுவதற்கு எதுவுமே நிகரில்லை. ஜீரணசக்தியை அந்தளவுக்கு தூண்டிவிடும். உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும்.