தொங்கும் தொப்பையை குறைக்க சோம்பு தேநீர்...

தொப்பையைக் குறைக்க எளிய வீட்டு மருத்துவம்...

உடல் எடை குறைந்தாலும் வயிறு குறையாமல் தொப்பை குறையாமல் தொங்கிக் கொண்டு இருக்கும் தொப்பையைக் குறைப்பது எப்படி என்று பலர் வழி தேடி அலைகின்றனர்
இதற்கு மிக சிறந்தாக தீர்வு ஆக சோம்பு தேநீர் பயன்படுகிறது.

சோம்பு தேநீர் நாள் தோறும் தொடர்ந்து பயன்படுத்தி வர  வயிறு தொப்பை வேகமாகக் குறைந்து கொண்டுவரும்
மாத விலக்குப் பிரச்சினைகள், கரு முட்டை,  நீர்க் கட்டிகள் பிரச்சினைகளில் நல்ல மாற்றம்  ஏற்படும்.ஒரு தேக்கரண்டி சோம்பு என்ற பெருஞ்சீரகம் நானூறு மில்லி தண்ணீர்
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து
நூறு மில்லி தேநீராக சுருக்கி
இறக்கி வடிகட்டி குடிக்கலாம். மஞ்சள்  கலந்து பச்சை நிறத்துடன் சுகந்த மணத்துடன் இருக்கும் தேநீர் இது
காலை மதியம் இரவு என மூன்று வேளைகளும் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக் குடித்து வர தொப்பை படிப்படியாகக் குறைந்து வரும்.

உடலின் வளர் சிதை மாற்றத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி சத்துக்கள் உடலில் முறையாக சேர செயல்பட உதவும் இந்த சோம்பு தேநீர்.
நாம் சாப்பிடும் உணவில் கொழுப்புகள் இருந்தாலும் உடம்பில் சேராமல் இருக்க வெளியேற செய்து  உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பாக பெண்களின் தொப்பை தொடைப் பகுதி பிட்டப் பகுதி மார்பகம் போன்ற இடங்களில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உதவும் இந்த சோம்பு தேநீர்
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு  பசி மற்றும் சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும். சோம்பு தீநீர் குடித்து வர பசியும் சீராக இருக்கும் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.

கல்லீரல் கணையம் செயல்பாட்டில் காணப்படும் ஒருங்கிணைப்பை சரி செய்து உடம்பில் இருக்கும் தேவையற்ற நச்சுப் பொருட்களை நீக்கி ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்
தூக்கம் இன்மை பிரச்சினைக்கு தீர்வாக சோம்பு தேநீர் அமையும்
காலை தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் பித்த உடம்புக்காரர்கள்  இந்த சோம்பு தேநீர் குடித்து வரலாம்.உடல் புத்துணர்வு பெரும். மூளை சுறுசுறுப்பு அடையும்.
உடலில் இருக்கும் கழிவுகள் குறிப்பாக தேவையற்ற நீர் சத்து கழிவுகள் வெளியேறும்.

உடலில் தேங்கும் தேவையற்ற யூரிக் ஆசிட்டை உடலை விட்டு வெளியேற்றும் பண்பு சோம்பு தேநீருக்கு உண்டு
கவுட் என்ற ஆர்த்திரிடிஸ் நோயாளிகளின் மூட்டு வீக்கம் வலிகள் கணுக்கால் வீக்கம் உள்ளவர்களுக்கும் உதவும் இந்த சோம்பு தேநீர்.
உடலில் சேரும் நச்சுகள் குறைக்க சோம்பு தேநீர் ஒரு நல்ல மருந்து
இந்த தேநீர் குடிக்க ஆரம்பிக்கும் முன் உங்கள் தொப்பையின் அளவை எடுத்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்ட பின் மறுபடியும் உங்கள் தொப்பையின் அளவை எடுத்துப் பார்க்கும்போது மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்
உடல் எடை குறைய விருப்பம் உள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உணவுக்கு முன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் குடிக்க வேண்டும். மற்றவர்கள் உணவுக்குப் பின்னரும் குடிக்கலாம்.  சோம்பு உடல் கழிவை வெளியேற்றும் நல்ல மருந்து
உடல் உற்சாகம் அடைய சோர்வு நீங்க குறிப்பாக தைராய்டு நோய் உள்ளவர்கள் சோர்வு நீங்க காலை மாலை  டீ காப்பி  குடிப்பதை நிறுத்தி விட்டு சோம்பு தேநீர் குடித்து வர உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும்.

இதை மருந்தாக அல்ல மூலிகைத் தேநீராகப் பயன்படுத்தி நலமுடன் வாழ முடியும்.