எந்த வலியா இருந்தாலும் வெங்காயம் இருக்க பயம் ஏன்?

நெஞ்சு வலி உள்பட வேறு எந்த வலியா இருந்தாலும் “வெங்காயம்” இருக்க பயம் ஏன்?

காய்கறிகளுள் மிகவும் காரமானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத்தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெஙகாயம்.

ஆனால், வெங்காயத்தை ருசித்து ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவான காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப்படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பேராற்றல் வாய்ந்த காய் கறியாக வெங்காயம் சிறந்து விளங்குகிறது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு வகைகளுள் முதலிடத்தில் இருக்கிறது. உயர்தரமான புரதம், அதிக அளவில் கால்சியம், ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள்கள் பாதுகாக்க பெரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமலேயே வைததிருந்தும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைக் கடியுங்கள் 

வெங்காயத்தில் உள்ள வாசனை கந்தக பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாசனை  மறைய நீண்ட நேரம் ஆவதற்கு இதுதான் காரணம் இந்த முறையில் வெங்காயத்தை சாப்பிட்டால் வாயில் உள்ள புண், கண்வலி, முதலியவை குணமாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரி போபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகிறது.

சிறிய வெங்காயத்திற்கும், பெரிய வெங்காயத்திற்கும் ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் கிடையாது. சிறிய வெங்காயத்தில் இருந்து தான் அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கின்றன.

எந்த முறையில் சாப்பிட்டாலும் சத்துக்கள் கிடைக்கும்

வெங்காயத்தை வதக்கியோ வேகவைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ, குணப்படுத்தும் மருத்துவக் குணங்களோ குறைந்து விடாமல் அப்படியே கிடைக்கும். காரம் அதிகமுள்ள வெங்காயத்தின் சுவையும் நறுமணமும் கூட அழிந்து விடாமல் அப்படியே கிடைக்கும்.

உடலுக்குக் கிளர்ச்சியை கொடுக்கும், சிறுநீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச் சிவக்க வைக்கிற மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். கபத்தை வெளிக் கொண்டுவரப் பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங்காயம் சிறந்த உணவு மருந்தாகத் திகழ்கிறது.

இரத்தம் விருத்தியாக, ஹீமோகுளோபின் அதிகரிக்க தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்.

நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.

காய்ச்சல், சிறுநீர்க் கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம் உடலுக்குக் கிளர்ச்சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறாகச் சாப்பிடுகிறவர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.

உடல் நலத்தோடு இருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காயத்தை மட்டும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைக்கு என பிரித்து வைத்துக் கொண்டு, தங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குளிர்காய்ச்சல் குணமாக 

வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
நெஞ்சு வலியா? வெங்காயம் போதும்! இதயப்பையின் சுவர் தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாளங்களில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கும். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத்திற்கு தடையின்றி நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும், நெஞ்சு வலியும் குணமாகும். இதனால் தான் இயற்கை மருத்துவர்கள் நெஞ்சுவலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலஸ்டிரால் குறையவும் இதயம் சீராக  துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடவும்.

புகை பிடிப்பவர்கள் குணம் பெற… 

சிகரெட் பிடிப்பவர்கள் நுரையீரல், புகையினால் பாதிக்கப்படுகிறது. இவர்கள் ஒருவேளைக்கு அரை அவுன்ஸ் வெங்காயச்சாறு வீதம் தினமும் நான்கு வேளை அருந்த வேண்டும். இதனால் நுரையீரல் பலம் பெறும். இதே முறையில் வெங்காயச் சாற்றை அருந்தினால் இருமல், கபம், இரத்த வாந்தி, நீண்ட நாள்களாக இருந்து வரும் ஜல தோஷம்,சளி முதலியவையும் பூரணமாய் குணமாகும்.

குளிர்கால ஜலதோஷமா? 

ஜல தோஷம், குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச்சளி, சளிக்காய்ச்சல் முதலியவை உடனே குணமாக சமஅளவு வெங்காயச் சாறு, தேன் முதலியவை கலந்த கலவையை தயாரிக்கவும். இந்த ஜூஸில் தினமு ம் நான்கு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். இந்த ஜூஸால் மூச்சுச் குழல் தொடர்பான அனைத்து நோய்களும் எந்த விதமான கெடுதலும் இன்றி உடனே குணமாகும்.

வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து மிக எளிதாய் உடலில் கலந்துவிடும். இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைவில் தேறிவிடுவார்கள்.

தாது பலம் பெறுங்கள் 

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய முதல் பொருளாய் வெள்ளைப் பூண்டு இருக்கிறது. இரண்டாவதாக இருப்பது வெங்காயம், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்கள் உரிக்கப்பட்ட வெள்ளை நிற வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, நெய்யில் வதக்கி எடுக்க வேண்டும். இந்தக் கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும். வெங்காயம், நெய், தேன் ஆகியன சேர்ந்த இந்தக் கலவை சிறந்த தாது புஷ்டி டானிக்காகும். நெய்யில் வதக்கிய வெங்காயத் துண்டுகளை ஒரு பாட்டிலில் நன்கு இறுக்கி மூடி வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம்.

தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்தால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் முதலியவை குணமாகும்.

சளி உள்ளவர்கள் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சளி வெளியேறி இரத்தமும் சுத்தமாகிவிடும்.

வெங்காயத்தை வதக்கிச் சூட்டுடன் ஒரு துணியில் வைத்து பருக்கள், புண்கள், வெட்டுக் காயங்கள் முதலிய இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் விரைவில் குணம் பெறுவார்கள்.

காலரா உடனே குணமாக …. 

காலரா நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து வெங்காயம். காரம் அதிகம் இல்லாத வெள்ளை நிற வெங்காயத்தில் ஐம்பது கிராமும், பத்து மிளகும் இதற்குப் போதும். உரித்த வெங்காயத்தையும் மிளகையும் ஒன்றாக வைத்து இடிக்க வேண்டும். அதனோடு ஜீனி சேர்த்து காலரா நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். வெங்காயம், மிளகு, ஜீனி சேர்த்த இந்தத் துவையல் காலரா நோயாளியின் தாகத்தைத் தணித்து மனதிற்கு அமைதியைத் தரும். மேலும் வாந்தி, சீத பேதி முதலியவற்றையும் உடனடியாக இந்தத் துவையல் கட்டுப்படுத்தி விடும்!

இரத்த மூலம் குணமாகும் 

இரத்த மூலம் குணமாக முப்பது கிராம் வெங்காயத் துண்டுகளைத் தண்ணீரில் போடவும். அதில் ஐம்பது கிராம் ஜீனியையும் சேர்த்து அருந்த வேண்டும். தினமும் இரு வேளை அருந்தினால் பத்து அல்லது பதினைந்து நாள்களில் இரத்த மூலமும், மூல நோயும் குணமாகும். வெங்காயத் துண்டுகளை டம்ளரில் நன்கு இடித்துப் போட வேண் டும்.

காதுவலியும் வெங்காயமும்! 

காதில் சத்தம் வந்து கொண்டே இருந்தால் (மணி ஒலிப்பது போல்) வெங்காயச்சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியை பிழிந்து சில துளிகளைக் காதில் விட வேண்டும். இது ரஷ்யாவில் பிரபலமான மருத்துவமுறை, மயங்கி விழுந்து விட்டவர்களின் மூக்கில் இரு துளி வெங்காயச்சாற்றை விட்டால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார்கள்.

காதில் வலி இருந்தால் 

சுட வைக்கப்பட்ட வெங்காயச் சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியைப் பிழிந்து இரண்டு மூன்று துளிகளைக் காதில் விட காது வலி சரியாகும்..

பற்களைப் பாதுகாக்க

பற்களில் பாக்டீரியாக்கள் தங்க விடாமல் இருக்கத் தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். இப்படி மென்று தின்றால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் பற்களும், ஈறுகளும் பாதிக்கப்படுவதும் முன்கூட்டியே தடுக்கப்படும்.

பல்வலி உள்ள இடத்தில் ஒரு துண்டு வெங்காயத்தை வைத்துக்கொண்டால் பல்வலி குறையும். பல் ஈறுகளில் உள்ள வலியும் குறையும். பல் தொடர்பான அனைத்து வெங்காய வைத்தியமும் ரஷ்யாவில் மிகவும் பிரபலமான வைத்திய முறைகளாகும்.

வெங்காயத்தின் தாயகம்! 

வெங்காயத்தின் தாவர விஞ்ஞானப் பெயர், அலியம் சிபா (Allium cepa) என்பதாகும்.

ஈரான் – பாகிஸ்தான் பகுதியில் தோன்றிய காய்கறி இது. மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்காயம் பண்டைய காலத்திலேயே மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் பயிர் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமான உணவு, வெங்காயம். ஒரு வகை வெங்காயத்தைக் கடவுளாகவே இவர்கள் வணங்கி வந்தார்கள். உறவினர்களைப் பார்க்கப் போகும் போதும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வெங்காயத்தைப் பரிசுப் பொருளாகக் கொடுத்து மகிழந்தனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகளிலும் வெங்காயம் வைத்தே புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யூதர்களுக்கு மிகவும் பிடித்தமானது வெங்காயம். அதனால் சூயஸ் வளைகுடாவில் ஆனியன் என்று பெயரிலேயே ஒரு நகரை கி.மு.430இல் யூதர்கள் நிறுவினார்கள். இந்த நகரம் 340 ஆண்டுகள் வரை இருந்தது.

இன்று உலகம் முழுவதும் வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது.

தாராளமாக கிடைக்கும் வெங்காயம் மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகவும் இருப்பது மனிதனுக்கு இயற்கை அளித்துள்ள பெரிய பரிசாகும்.