அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள்...

ஐந்தே நிமிடங்களில் அல்சர் என்னும் குடல் புண்ணினால் ஏற்படும் வலியைப் போக்கும் அதிசய காய கற்பமூலிகையே சித்திரபாலடையேனும் அம்மான் பச்சரிசி. 

யூரினரி இன்ஃபெக்சன் எனும் சிறுநீர் அலர்ஜியில் மாட்டித் தவிப்பவர்கள் இதன் இலையுடன் சிறிதளவு வேப்பம்பட்டை, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்த நீரினால் இரண்டு மூன்று தரம் கழுவி வந்தாலே சிறுநீர் அலர்ஜி என்பது  வந்த சுவடே தெரியாமல் சென்றுவிடும்.

 அதி அமிலத் தன்மையால் வயிற்றினுள் ஏற்படும் அனைத்துவகை புண்களுக்கும் இதனிலையுடன் சிறிது கசகசா சேர்த்து  தேங்காய்ப்பால் விட்டரைத்து காலை மாலை ஐந்துகிராம் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வருடக்கணக்கில் வயிற்றினில் இருந்த புண்கள் யாவும் மாயமாய் மறையும் அதிசயத்தை காணலாம். 

மேலும் கழுத்துப்பகுதி அக்குள் பகுதிகளில் தோன்றும்  தேவையில்லாத மருக்களினால் அவதிப்படுவோர் இதன் தண்டினில் வரும் பாலை மருக்களின் மேல் பூசிவர பத்து நாட்களுக்குள் மரு உதிர்ந்து விடும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இதன் சமூலத்துடன் மலைவேம்பு, மருதம்பட்டை சேர்த்து ஐந்து கிராம் அளவு பசும்பாலில் காய்ச்சி ஆண் பெண் இருவரும் குடித்து வர ஆண் பெண் மலட்டுக் குற்றங்கள் யாவும் நீங்கி அழகிய குழந்தைகள் உங்களின் மடியினில் தவழ்வது உறுதி.