மூட்டுவலிகளுக்கு சண்டித்தைலம்

எட்டே எட்டு நாட்களில் மூட்டுவலி அனைத்தையும் அடித்து விரட்டி. சண்டிக் குதிரை போன்ற உடல்பலத்தினை நமக்கு பெற்றுத் தரும் அற்புத ஆற்றல் பெற்ற மூலிகையே  இலச்சக்கொட்டை எனும் சண்டிக்கீரை.

 பொதுவாக மூட்டுவலி வருவதற்கு காரணமே சுண்ணாம்புச் சத்து குறைபாடு மற்றும் உடலுக்குத் தேவையான அசைவுப் பயிற்சியின்றி பிள்ளையாரைப் போன்று ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதும்  நீண்டநேரம் கைபேசியுடன் பொழுதைக் களிப்பதனால் உடம்பினுள் பித்தம் அதிகமாய் சுரந்து தேகசூட்டினை உண்டாக்கி மூட்டு மஜ்ஜைகளை வறளச் செய்வதனாலேயும், முன்னோர்களின் மரபுவழி கடத்தலாலுமே நமக்கு மூட்டுவலி வருகிறது. 

எப்படியோ வந்துவிட்ட மூட்டுவலியை விரட்ட. சண்டியை வாரம் இருமுறை உணவுடன் எடுத்துக் கொள்வதுடன். சண்டி விழுதின் சாறு நூறுமில்லி. சோற்றுக் கற்றாழையின் சாறு ஐம்பது மில்லி. மேனிச்சாறு இருபதுமில்லி.   சுத்தமான வேப்ப எண்ணெய் நூறு மில்லி. கடுகு எண்ணெய் ஐம்பது மில்லி. தேன்மெழுகு இருபத்தைந்து கிராமென   தைலம்செய்து. ஆறியவுடன் பச்சைக் கற்பூரம் ஐந்துகிராம் சேர்த்து  உடலிலுள்ள ஒன்பது மூட்டு இணைப்புகளில் தேய்த்துவிட்டு குனிந்து நிமிர்ந்து உடலை வளைத்து நெளித்து சிறிது நடைப் பயிற்சியுடன் பிள்ளையாரை நினைத்து கோவிலிலோ அல்லது உங்கள் வீட்டினிலோ  காலை மாலையென எட்டுத் தோப்புக் கரணமிட்டால் எட்டே நாட்களில் நம்மை வாட்டி வதைக்கும் மூட்டுவலிக்கு எட்டாத துரத்திற்கு நீங்கள்செல்வது உறுதி.