சந்தனம் மணப்பது மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சரி செய்யும்!

சந்தனமரத்தில் இவ்வளவு மருத்துவம் இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

சந்தனமரம்:

தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம்.

சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது.

இது துவர்ப்பு மணமும் உடையது.

தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம்.

இலைகளின் மேற்பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப்பகுதி வெளிறியும் காணப்படும்.

கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக்கட்டை தான் நறுமணம் உடையது.

மருத்துவப் பயனுடையது.

இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம்.

இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும்.

இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும்.

விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.

மருத்துவம்:

1.. சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை அதிகரிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும்.

2.. சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும். விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும்.

3.. உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது.

4.. முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.

5.. கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.

6.. பசும்பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அலற்சி ஆகியவை தீரும்.

7.. சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலுவுறும்.

8.. சந்தனத் துண்டுளை நீரில் ஊற வைத்து மைய அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள உடல் தேறி, நோய் தீரும்.

9.. சந்தன எண்ணெய் தைலம் ‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

10.. நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி.யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.