கடுகின் மருத்துவ குணங்கள்:

கடுகில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்  :

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர். அதுபோல தான் கடுகு தன்னகத்தே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஆகையால் தான் கடுகை நாம் எல்லா குழம்புகளிலும் தாளித்து சேர்க்கிறோம். சமையலுக்கு முக்கிய பொருளாக விளங்குவது கடுகு.

திரிகடுகம் என்ற மூன்று மருத்துவ பொருட்களில் முதலில் கடுகின் பெயருக்குத்தான் உண்டு. கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது.

கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீசு, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதம், இரும்பு, நார்சத்து, துத்தநாகம் மற்றும் அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

கடுகு விதையில் உடலுக்கு அவசியமான எண்ணெய் சத்து உள்ளது. மட்டுமல்லாது கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. குறிப்பாக 100கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்து பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் கடுகை அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. பெரிதான பின்பு பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

கடுகு இருமலை கட்டுப்படுத்தக் கூடியதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமாகும்.

இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு எண்ணெய் முற்றிலும் நன்மை செய்கிறது. இது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு இரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

கடுகில் உள்ள நியாசின் ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுக்கிற்கு உண்டு.

இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீசு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும், தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால், உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

போலெட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. இவை நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.