சியா - சப்ஜா விதைகள் வேறுபாடுகள்...

சியா - சப்ஜா விதையில் என்ன வித்தியாசம்? எது வேகமாக எடையை குறைக்கும்?

இதுவரை நாம் சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்று என்று நினைத்து இருப்போம். ஆனால் சியா விதைகளுக்கும் மற்றும் சப்ஜா விதைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளைக் கொண்டு இவற்றின் பயன்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் என்ன வித்தியாசம், வாங்க தெரிஞ்சுக்கலாம். சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் என்ற இந்த இரண்டு விதைகளும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். இதனால் என்னவோ நிறைய பேர்கள் குழம்பி போய் விடுகிறார்கள். ஏன் சில கடைக்காரர்கள் கூட இதை மாற்றிக் கொடுப்பதுண்டு. இப்படி இதில் மாற்றம் ஏற்பட முக்கிய காரணம் இதன் தோற்றமே. நீங்கள் நிறைய பழச்சாறுகளை குடிக்கும் போது பார்த்து இருப்பீர்கள் அதில் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் பப்பாளி பழ விதைகள் போன்று போட்டு இருப்பார்கள். அவைகள் தான் இந்த சியா மற்றும் சப்ஜா விதைகள். இந்த இரண்டு விதைகளையுமே டயட் இருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். உண்மையில் டயட் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் ஃபுட் என்றே கூறலாம். காரணம் நம் உடல் எடையை குறைப்பதில் இந்த விதைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சியா விதைகள்

சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதைகள் ஆகும். ஒரு மில்லி மீட்டர் அளவு கொண்ட இந்த விதைகள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் சேமிப்பு கிடங்கு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சியா என்ற பெயர் 3500 பிசி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய மாயன் காலத்து சொல்லில் இருந்து பெறப்பட்டது. சியா என்பதற்கு வலிமை என்று பொருள்படும்.

சப்ஜா விதைகள் திருநீற்றுப் பச்சிலை என்கிற தாவரத்தின் விதைகளாகும். இந்த விதைகளை பலூடாக்களில் பயன்படுத்துவதால் இதை பலூடா விதைகள் என்றும் கூறுகின்றனர்.
எனவே இதுவரை இந்த இரண்டு விதைகளும் ஒன்று என்று நீங்கள் நினைத்து வந்து இருக்கலாம். ஆனால் உண்மையில் இவற்றிற்கிடையே இன்னும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

வேறுபாடுகள்

வளரும் இடங்கள்

சியா விதைகள் :
இது மெக்ஸிகோவை பூர்வீகமாக கொண்டது. இதன் தோற்றம், தன்மை, நிறம் இப்படி எல்லாவற்றிலும் சப்ஜா விதைகளில் இருந்து வேறுபடுகிறது.

சப்ஜா விதைகள் :
சப்ஜா விதைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த இரண்டுமே புதினா குடும்பத்தை சேர்ந்ததால் பார்ப்பதற்கு ஒன்று போல் தெரிகிறது.

​பூர்வீகம்

சியா விதைகள் மத்திய மற்றும் தெற்கு மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. சப்ஜா விதைகள் இந்தியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவை.

நிற அடிப்படையில்:

பார்க்கும் போது சியா விதைகள் சப்ஜா விதைகளை விட சிறியதாக இருக்கும். சியா விதைகள் வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் என்ற மூன்று நிறங்களிலும் கலந்து காணப்படும். இதுவே நீங்கள் சப்ஜா விதைகளை பார்த்தால் அது கருப்பு நிறத்தில் மட்டுமே காணப்படும்.

தோற்றம்

சியா விதைகள் பார்ப்பதற்கு ஓவல் வடிவத்தில் எள் போன்று இருக்கும். இதுவே சப்ஜா விதைகள் நீள் வட்ட வடிவில் அரிசியை போன்று காணப்படும்.

​ஊற வைத்தால் என்னவாகும் :

இந்த இரண்டு விதைகளையும் தண்ணீரில் ஊற வைக்கும் போது இதன் மூழ்கும் தன்மை வேறுபடுகிறது.
சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இது தண்ணீரை உறிஞ்சி 10 மடங்கு அளவில் பெரிதாக ஜெல் மாதிரி மாற ஆரம்பிக்கும். 

இதுவே சப்ஜா விதைகள் சீக்கிரமே தண்ணீரை உறிஞ்சி அளவில் சியா விதைகளை விட பெரிதாகி விடும். பார்ப்பதற்கு கண்ணாடி பந்து போல் பளபளக்கும். புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் பார்பதற்கு ஜவ்வரிசி மாதிரி தோற்றமளிக்கும்.

சுவை

பார்க்கும் போது தெரியும் சியா விதைகள் பாட்டிலின் அடிப்பகுதியில் தங்கி இருக்கும். இதுவே சப்ஜா விதைகள் பாட்டிலின் மேல் பகுதியில் இருக்கும்.

சியா விதைகளுக்கு என்று தனித்துவமான சுவை கிடையாது. இந்த விதைகளை நீங்கள் எந்தவொரு உணவிலும் எளிதாக சேர்த்துக் கொள்ளலாம். சப்ஜா விதைகளுக்கு லேசாக துளசியின் சுவை இருக்கும். இது ட்ரிங்க்ஸ் மற்றும் டிசர்ட் வகைகளில் அதிகமாக பயன்படுகிறது.

​செய்யும் அற்புதங்கள்

சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். ஆனால் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது அப்படியே பொடியாக்கி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இந்த இரண்டு விதைகளுமே உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீரில் பெரிதாகும் தன்மை இருப்பதால் இந்த விதைகளை சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பி விடும். பசி எடுக்காது. விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறப்பான உணவாக இந்த விதைகள் இருக்கிறது.

​சியா விதைகளின் பயன்பாடு :

இதில் புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.

குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் கொண்டு இருப்பதால் சீரண சக்தியை மேம்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை தருகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

வெந்நீரில் ஊற வைத்து மூன்று வேளை உணவுக்குப் பின்னும் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

​சப்ஜா விதைகளின் பயன்பாடு :

உடல் எடையைக் குறைக்கும். ஆனால் வேகமாகக் குறைக்காது. நிதானமாக முயற்சி செய்ய வேண்டும்.

உடலுக்கு இது குளிர்ச்சியை தருகிறது.
வயிற்றில் ஏற்படும் அசிட்டிட்டி பிரச்சினையை களைகிறது.

விட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துகள் காணப்படுகின்றன.

சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தம் செய்கிறது.