காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாக சொட்டு மருந்து...

காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாக சொட்டு மருந்து :

காது சம்பந்த பட்ட நோய்களான காது வலி, காதில் சீழ் வடிதல், நீர் வடிதல், காது மந்தம், காது இரைச்சல், காது குத்தல் வலி, காது குடைச்சல் குணமாக சித்தர்கள் குறிப்பாக கூறிய காது சொட்டு மருந்து, காது அடைப்பு மருந்து, 

காது சொட்டு மருந்து செய்ய தேவையான பொருட்கள் :

1. ஆமணக்கு எண்ணெய் 500 ml
2. சுக்கு 50 கிராம்
3. நொச்சி இலை 100 கிராம்
4. வெள்ளைப் பூண்டு 20 கிராம்
5. வலம் புரிக்காய் 4
6. இடம் புரிக்காய் 4

காது சொட்டு மருந்து செய்முறை :

ஆமணக்கு எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்றாக அரைத்து ஆமணக்கு எண்ணையை அடுப்பில் ஏற்றி காய்ச்சி அரைத்து வைத்துள்ள பொருட்களை எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி சுத்தமான வெள்ளை துணியில் வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

காது சொட்டு மருந்து உபயோகிக்கும் முறை:

காதில் இரண்டு முதல் மூன்று சொட்டுகள் விதம் இரண்டுவேளை தினமும் விட வேண்டும்

காது சொட்டு மருந்து பயன்கள் :

காது வலி, காதில் நீர் வடிதல், காதில் சீழ் வடிதல், காது குடைச்சல், காது இரைச்சல், காது மந்தம் இவை அனைத்தும் தீரும்.